தேசமான்ய (Deshamanya) என்பது, இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் சிறீ லங்காபிமான்யவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும். தேசமான்ய என்னும் சொல் சிங்கள மொழியில் "நாட்டின் பெருமை" என்னும் பொருள் கொண்டது. நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்படுகிறது.[1] வழமையாக இக்கௌரவம் பெற்றவரின் பெயருக்கு முன்னால் தேசமான்ய என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர் (எ.கா: தேசமான்ய வைத்திலிங்கம் மாணிக்கவாசகர்).
1986 ஆம் ஆண்டு முதல் தேசமான்ய விருது பெற்றோர் விபரங்கள்.[2]
- பொல்வத்த ஆராச்சிகே ரொமியேல் அந்தனீஸ் - மருத்துவரும், கல்வியாளரும்.
- காமினி கொரியா
- மொகம்மத் காசிம் மொகம்மத் கலீல்
- மாலகே ஜோர்ஜ் விக்டர் பெரேரா விஜேவிக்கிரம சமரசிங்க
- மிலானி குளோட் சான்சோனி
- விக்டர் தென்னக்கோன் - முன்னாள் இலங்கைத் தலைமை நீதிபதி
- எட்வின் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்க
- நெவில் தீசியஸ் தர்மபால கனகரத்தின - இராஜதந்திரி
- வைத்திலிங்கம் மாணிக்கவாசகர் - உச்ச நீதிமன்ற நீதிபதி
- விஜேரத்ன முதியான்சேலா திலகரத்ன
- ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தன
- தம்பையா சிவஞானம்
- டொன் சேபால ஆட்டிகல
- நந்ததேவ விஜேசேகர
- பதியுதீன் மஹ்மூத்
- பாலகுமாரன் மகாதேவா
- நாணயக்கார வாசம் ஜேம்ஸ் முதலிகே
- எட்வேட் லயனல் சேனாநாயக்க
- வால்ட்டர் ஜெஃப்ரி மொன்டேகு ஜயவிக்கிரம
- கே. டபிள்யூ. தேவநாயகம்
- நிசங்க பராக்கிரம விஜேரத்ன
- சிவகாமி வெரினா ஒபேசேகர
- கிரிஸ்தோபர் கிரெகரி வீரமந்திரி
- நெவில் உபேசிங்க ஜயவர்தன
- இவான் சமரவிக்கிரம
- சந்திரபால் சண்முகம்
- அப்துல் கபூர் மொகமத் அமீர்
- மொகமத் அப்துல் பாக்கீர் மார்க்கார்
- ஹேவா கொமனகே தர்மதாச
- ஆனந்த வீகேன பள்ளிய குருகே
- எட்வின் லொக்குபண்டார ஹுருல்லே
- அப்துல் மஜீத் மொகமத் சகாப்தீன்
- சுப்பையா சர்வானந்தா
- லீனஸ் சில்வா
- நிசங்க விஜேவர்தன
- ஜெஃப்ரி மனிங் பாவா - கட்டிடக்கலைஞர்
- சி. ஏ. கூரே
- பீலிக்ஸ் ஸ்டான்லி கிறிஸ்தோபர் பெரேரா கல்பகே
- ஹென்றி விஜயக்கோன் தம்பையா
- அலெக்சான்டர் ரிச்சார்ட் உடுகம - மேஜர் ஜெனரல்
- பொன்னா விக்னராஜா
- நொயெல் விமலசேன
- ஜயந்த கெலகம
- ஜீவக லலித் பூபேந்திர கொத்தலாவல
- நந்ததாச கொடகொட
- கோட்ஃபிரி குணதிலக
- அருளானந்தம் யேசுஅடியான் ஞானம்
- நுகேகொட கபடாகே பப்லிஸ் பண்டிதரத்ன
- சுரேந்திர இராமச்சந்திரன்
- தெரணியகலகே பசில் ஐவர் பீரிஸ் சமரநாயக்க சிரிவர்தன
- சரித்த பிரசன்ன டி சில்வா
- கென் பாலேந்திரா
- டொரீன் வினிஃபிரெட் விக்கிரமசிங்க
- தமாரா குமாரி இலங்கரத்ன
- எலங்க தேவப்பிரிய விக்கிரமநாயக்க
- ராஜேந்த்ர காளிதாஸ் விமல குணசேகர
- வேர்ணன் லொரெய்ன் பெஞ்சமின் மெண்டிஸ்
- ஹெர்மன் லெனார்ட் டி சில்வா
- ஏரீஸ் தோமஸ் ஆபிரகாம் கோவூர்
- ரஞ்சித் அபேசூரிய
- டங்கன் வைட்
- கிறிஸ்தோபர் ரஜிந்த்ரா பானபொக்கே
- வன்னகுவத்தவடுகே டொன் அமரதேவ
- சித்ரசேன
- அமரானந்த சோமசிரி ஜயவர்த்தன
- ஏ. எச். செரீப்தீன்
- ஆஷ்லி டி வொஸ் - கட்டிடக்கலைஞர்
- அசோகா காந்திலால் ஜயவர்தன
- பிராட்மன் வீரக்கோன்
- சந்திரானந்த டி சில்வா
- டி. பசில் குணசேகர
- ஹரி ஜயவர்தன
- ஜே. பி. பீரிஸ்
- ஜயரத்ன பண்டா திசாநாயக்க
- ஜோசெப் எவரார்ட் டெனிஸ் பெரேரா
- கந்தேகுமார ஹப்புதொரகமகே ஜோதியரத்ன விஜேதாச
- எல். டி. சிரில் ஹேரத்
- லலித் டி மெல்
- எம். டி. டி. பீரிஸ்
- எம். டி. ஏ. புர்க்கான்
- மகேஷ் அமலீன்
- மனோ செல்வநாதன்
- நிகால் ஜினசேன
- பி. தேவ ரொட்ரிகோ
- படி மென்டிஸ்
- பத்மநாதன் இராமநாதன்
- பிலிப் ரேவத விஜேவர்தன
- பிரேமசிரி கேமதாச
- ராதிகா குமாரசாமி
- ரொகான் டி சேரம்
- ரோலண்ட் சில்வா
- சோலி ஈ. கப்டன்
- சுனில் மென்டிஸ்
- டபிள்யூ. டி. லக்ஷ்மன்
- வில்லியம் அல்விஸ்
- கமலிக்கா பிரியதேரி அபேரத்ன
ஜேம்ஸ் பீட்டர் ஒபயசேகர
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]