தேசிய நெடுஞ்சாலை 138 | ||||
---|---|---|---|---|
தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | ||||
நீளம்: | 54 km (34 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | தே.நெ. 38 in தூத்துக்குடி | |||
மேற்கு முடிவு: | தே.நெ. 44 in திருநெல்வேலி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 138 (National Highway 138 (India)) என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை இணைக்கும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1]
இந்த நெடுஞ்சாலை திருநெல்வேலி நகரில் உள்ள பாளையங்கோட்டையைத் தூத்துக்குடி நகரத்தில் உள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகத்துடன் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்ல முடியும். இது துறைமுகத்திற்கு நேரடி பாதையை வழங்குகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 54 கி. மீ. ஆகும்.
தூத்துக்குடி வானூர்தி நிலையம் வாகைகுளம் அருகே இந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விமான நிலையம் தூத்துக்குடி நகரத்திலிருந்து 26 கி. மீ. தொலைவிலும், திருநெல்வேலி நகரத்திலிருந்து 28 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.