தேசிய நெடுஞ்சாலை 144அ | ||||
---|---|---|---|---|
![]() நிலப்படத்தில் தே. நெ. சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 230 km (140 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | சம்மு (நகர்) | |||
வடக்கு முடிவு: | பூஞ்ச் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சம்மு காசுமீர் | |||
முதன்மை இலக்குகள்: | அக்னூர், ரஜௌரி, சுந்தர்பனி, கலாகோட் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 144அ (National Highway 144A) என்பது இந்தியாவின் சம்மு-காசுமீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] சம்மு மற்றும் பூஞ்ச் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை 44-இன் ஒரு கிளைச் சாலையாக தே. நெ. 144அ உள்ளது. இச்சாலை அக்னூர், சுந்தர்பனி, கலாகோட், நௌசேரா, ரஜெளரி உள்ளிட்ட நகரங்களை இணைக்கின்றது. ரஜெளரி, பூஞ்ச் மாவட்டத்தின் பல நகரங்கள் தேசிய நெடுஞ்சாலை 144அ உடன் ஒற்றை அல்லது இரட்டை வழிச் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.[2][3]
சம்மு, அக்னூர், காளி தார், பாம்ப்லா, சுந்தர்பனி, நவ்ஷேரா, ரஜெளரி, மஞ்சாகோட், பூஞ்ச்.[1][3][4]