![]() | |
வகை | ஆராய்ச்சி நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1923 |
பணிப்பாளர் | மருத்துவர் எம். எஸ். சவுகான் |
அமைவிடம் | கர்னால், அரியானா 29°42′14″N 76°58′55″E / 29.704°N 76.982°E |
வளாகம் | 1384 ஏக்கர் |
இணையதளம் | www |
தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் (National Dairy Research Institute) என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள கர்னாலில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கான முதன்மை நிறுவனம் ஆகும்.[1] இந்த நிறுவனம் 1989 ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழக தரத்தினைப் பெற்றது.
தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் 1923ஆம் ஆண்டில் பெங்களூரில் இம்பீரியல் கால்நடை மற்றும் பால் நிறுவனமாக நிறுவப்பட்டது. இது 1936ஆம் ஆண்டில் இம்பீரியல் பால்பண்ணை நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1947ஆம் ஆண்டில் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. 1955ஆம் ஆண்டு இதன் தலைமையகம் கர்னாலுக்கு மாற்றப்பட்டது. இந்நிறுவனத்திற்கு நிகர்நிலை பல்கலைக்கழக தரம் 1989இல் வழங்கப்பட்டது.[2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)