தேவ் | |
---|---|
![]() அதிகாரப்பூர்வ திரைப்பட பிரசுரம் | |
இயக்கம் | Rajath Ravishankar |
தயாரிப்பு | S. Lakshman Kumar |
கதை | Rajath Ravishankar |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | கார்த்தி ரகுல் பிரீத் சிங் பிரகாஷ் ராஜ் ரம்யா கிருஷ்ணன் விக்னேஷ்காந்த் |
ஒளிப்பதிவு | ஆர். வேல்ராஜ் |
படத்தொகுப்பு | ரூபன் |
கலையகம் | Prince Pictures |
விநியோகம் | Reliance Entertainment Murali Cine Arts (தமிழ்நாடு) |
வெளியீடு | பெப்ரவரி 13, 2019[1] | (ஐக்கிய அமெரிக்கா) பெப்ரவரி 14, 2019 (இந்திய)
ஓட்டம் | 139 நிமிடங்கள் (2 மணிநேரம் and 19 நிமிடங்கள்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹55 கோடி[2] |
தேவ் (Dev) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் மொழி காதல் - அதிரடி சாகசத் திரைப்படம் ஆகும். சாலை சாகசத்தை அடிப்படையாகக் கொண்ட படத்தை ராசாத் ரவிசங்கர் முதன்முறையாக எழுதி இயக்கியிருந்தார்[3][4].
திரைப்படத்தில் கார்த்தி மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் இப்படத்தில் துணை மற்றும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்[5][6] . படத்திற்கான இசையமைப்பாளராக ஆரிசு செயராச்சும், ஒளிப்பதிவாளராக ஆர்.வேல்ராஜ் மற்றும் பட்த்தொகுப்பை அந்தோணி எல். ரூபன் ஆகியோர் வேலை செய்திருக்கிறார்கள்[7]. கார்த்திக்கும் இசை இயக்குநர் ஆரிசு ஜெயராசுக்கும் இடையிலான முதல் இணைப்பை இப்படம் குறிக்கிறது[8]. முன்னதாக 21 டிசம்பர் 2018 அன்று கிறித்துமசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்டது. பின்னர் 10 சனவரி 2019 அன்று பொங்கல் நாளில் திரையிடலாம் எனத்திட்டமிடப்பட்டது, ஆனால் அத்திட்டமும் மாற்றப்பட்டு இறுதியாகத் திரையரங்க வெளியீடு 14 பிப்ரவரி 2019 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
பல படங்களோடு போட்டியிட்டு திரைப்பட கடும் போட்டிகளுக்கு இடையில் தேவ் திரைப்படம் திரைக்கு வந்தது.[9][10][11][12].
நகைச்சுவை நடிகரான தேவின் நண்பர் விக்கி படத்தின் முதல் பாதியை விவரிக்கிறார். தேவ் சாகசங்களின் மீது விருப்பம் கொண்ட ஓர் இளைஞன் ஆவார். எப்போதும் புதிய புதிய சாகசங்களை அவர் மனம் நாடும். இருப்பினும், தேவின் வாழ்க்கையில் குறிக்கோள் ஏதும் இல்லை என்று விக்கி உணர்கிறார். தனது சாகசப் பயணங்களுக்கு தேவ் எப்போதும் தனது நண்பர்களை அழைத்துச் செல்வார். ஆனால் தேவின் வாழ்க்கையை விட வித்தியாசமான ஒரு வாழ்க்கையை விக்கி விரும்புகிறார். தனது ஆர்வத்தை பின் தொடர்வதைக்காட்டிலும் சாதாரண ஓர் அலுவலக வேலையை இவர் விரும்புகிறார். தேவின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்று விக்கி விரும்புகிறார். திசைதிருப்பப்பட்டால் தேவ் இனி சாகசப் பயணங்களுக்குச் செல்லமாட்டான் என்பதற்காகவும் குறிப்பாக தன்னை அவனுடன் இழுத்துச் செல்லவும் மாட்டான் என்பதற்காக விக்கி அத்தகைய திட்டமொன்றை திட்டமிடுகிறார். தேவ் ஒரு பெண்ணை நேசிக்கும்படி தேவ் ஊக்குவிக்கப்படுகிறார். ஓர் அலுவலக வேலைக்காக செல்லவேண்டிய நேர்காணலுக்குச் செல்ல விடாமல் விக்கியை தேவ் தடுத்துவிடுகிறார். தேவ் விக்கியை ஒரு நகைச்சுவை மேடைப் பேச்சாளராக தனது திறமையை உணரவைத்து அதையே பின்பற்றவும் செய்கிறார். முகநூல் வழியாக சான் பிரான்சிசுச்கோவில் பணிபுரியும் ஒரு தொடக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மேக்னாவை தேவ் பார்த்து ஒரு நட்பு வேண்டுதல் அனுப்புகிறார். தனது கோரிக்கைக்கு அவள் பதிலளிக்காத காரணத்தால் அவர் ஏமாற்றமடைகிறார். பின்னர், அவள் ஒரு பெரிய தொழிலதிபர் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். இந்த நாளிலும், வயதிலும் ஒரு பெண்ணைப் பின்பற்ற தேவ் தயக்கம் காட்டுகிறார். அவனது நண்பர்கள் அவனை எப்படியாவது பின்தொடர ஊக்குவிக்கிறார்கள், ஏனெனில் இது ஒரு துணிச்சலான செயல். விதி மேக்னாவை இறுதியில் இந்தியாவில் கொண்டு வந்து தேவின் முன் சேர்க்கிறது.
ஆதலால் தனது நெறிமுறைகளைத் தூக்கி எறிந்து அவளது இதயத்தை வென்றெடுக்க முயற்சிக்கிறார். தனது தந்தை அவளையும் தாயையும் விட்டு வெளியேறியபோது ஏற்பட்ட குழந்தைப் பருவ அதிர்ச்சியின் காரணமாக ஆண்களை நம்புவது மேக்னாவுக்கு கடினமாக உள்ளது. மேக்னா அமெரிக்காவில் வசிக்கிறார். தேவின் குடும்பமும் அவரது குடும்பத்தின் வியாபாரமும் இந்தியாவில் உள்ளது. தேவ் மேக்னாவின் காதலை வெல்வாரா? உறவு நீடிக்குமா இல்லையா? என்பது தான் கதை.
தேவ் என்ற படத்தை முன்னதாக அனுராக் காசுயப்பின் உதவியாளராக பணியாற்றிய அறிமுக இயக்குநரான ராசாத் ரவிசங்கர் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் இயக்கும் திட்டமாக அறிவித்தார். மேலும் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர். தேவ் என்ற படத்தை முன்னதாக அனுராக் காசுயப்பின் உதவியாளராக பணியாற்றிய அறிமுக இயக்குநரான ராசாத் ரவிசங்கர் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் இயக்கும் திட்டமாக அறிவித்தார். மேலும் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இந்த படத்தில் தீரன் அதிகாரம் ஒன்றுவுக்குப்[14][15] பிறகு இரண்டாவது முறையாகத் ஒன்றாக முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்பதும் தெரியவந்தது.
இப்படம் 8 மார்ச் 2018 முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்றது[16].
படத்தின் முதல் பார்வை சுவரொட்டி கார்த்தியின் சகோதரர் சூரியா 25 அக்டோபர் 2018 அன்று வெளியிட்டார்[17]. 2010 ஆம் ஆண்டில் பையா திரைப்படத்திற்குப் பிறகு 9 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னணி நடிகருடன் கார்த்தி ஒரு சாலை சாகசப் படத்தில் நடிக்கத் திரும்பினார் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரமாகவும், ஓர் இந்தியப் பெண் தொழில்முனைவோராகவும் மேக்னா என்ற கதாபாத்திரத்தை முன்னணி நடிகை ராகுல் பிரீத் சிங் நடிக்கவிருந்தார்[18][19].
முன்னாள் இந்திய மட்டைப்பந்து தலைவரும் அனைத்துத் துறையிலும் திறமையான கபில் தேவின் வாழ்க்கையிலிருந்து கதைக் கரு ஈர்க்கப்பட்டதாகத் திரைப்பட இயக்குநர் தெரிவித்தார். படத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரு சக்கர வாகன சாகச காட்சிகளும் முன்னணி நடிகர் கார்த்தியும் ஒரு இரு சக்கர வாகன காதலன் / ஆர்வலராக நடிக்கிறார். அக்காட்சிகள் இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் உள்ள சாலைகளில் குறிப்பாக எவரெசுட் சிகரத்தில் படமாக்கப்பட்டன[20][21]. படத்தின் காட்சிகள் சென்னை, ஐதராபாத்து (இந்தியா), பெங்களூர், மும்பை, புனே, குலு, மணாலி, இமயமலை, குல்மார்க், உக்ரைன் மற்றும் கார்பேத்திய மலைகள் போன்ற பகுதிகளில் விரிவாகப் படமாக்கப்பட்டன[22]. படப்பிடிப்பு 2018 நவம்பர் தொடக்கத்தில் உக்ரைனில் முடிவடைந்தது[23]. படத்தின் கடைசி காட்சி பகுதிகள் இமயமலை மலைத்தொடரில் சிசு என்ற இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது[24].
திரைப்படம் 14 பிப்ரவரி 2019 அன்று வெளியிடப்பட்டது. சில விமர்சகர்கள் ஒரு சோர்வூட்டுகிற விலையுயர்ந்த தவறான சாகசங்களைக் கொண்ட ஒரு காதல் கதை என்று மதிப்பிட்டனர்.[25][26]
படத்தின் அசல் பதிப்பில் 159 நிமிடங்கள் இயங்கும் நேரமாக இருந்தது, ஆனால் பின்னர் மோசமான விமர்சனங்கள் காரணமாகப் படம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டது[27].
படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரம் 5 நவம்பர் 2018 அன்று தீபாவளிக்குப் பின்னர் வெளியிடப்பட்டது மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான ஆதரவான விமர்சனங்களைப் பெற்றது[28]. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ விளம்பரத்தை நடிகர் சூரியா 31 ஜனவரி 2019 அன்று வெளியிட்டார்[29]. படத்திற்கான உரிமைகள் முரளி சீனி ஆர்ட்சுக்கு விற்கப்பட்டன[30].
அதிகாரப்பூர்வ ஒலிப்பதிவின் முதல் பாடல் 14 டிசம்பர் 2018 அன்று திரைப்படத் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது மற்றும் இசை இயக்குநர் ஜெயராஜ் தனது டிவிட்டர் கணக்கில் இது கார்த்தியுடனான தனது முதல் படம் என உறுதிப்படுத்தினார்[31][32]. படத்தின் முதல் தனிப்பாடல் விமர்சகர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான ஆதரவான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் அதன் வெளியீடு பிரபலமாக இருந்தது[33]. ஆறு பின்னணி பாடகர்கள் கூடி இப்பாடலைப் பாடியதாக அறிக்கைகள் வெளிப்படுத்தின[34][35][36]. பாடல் தொகுப்பின் மீதமுள்ள பாடல்கள் 12 சனவரி 2019 அன்று தொடங்கப்பட்டன[37].
பாடல் வரிசை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "அணங்கே" | ஹரிசரண், திப்பு, கிரிஷ், அர்சுன் சாண்டி, பாரத் சுந்தர் , சரன்யா கோபிநாத் | 5:59 | |||||||
2. | "ஒரு நூறு முறை" | சத்ய பிரகாஷ், சக்திசிரி கோபாலன் | 5:43 | |||||||
3. | "சி ஈசு மை கேர்ள்" | ஹரிசரண், மகதி, பிலேசு | ||||||||
4. | "டேய் மச்சான் தேவ்" | நரேஷ் ஐயர், வேல்முருகன், மாலவிகா மனோச், தீப்பிகா. | 5:00 | |||||||
5. | "எங்கடி நீ போன" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:45 | |||||||
மொத்த நீளம்: |
26:04 |
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)