பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
12039-16-6 | |
பண்புகள் | |
Ti2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 191.93 |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம் |
அடர்த்தி | 3.684 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தைட்டானியம்(III) சல்பைடு (Titanium(III) sulfide) என்பது Ti2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை தைட்டானியம் முச்சல்பைடு, தைட்டானியம் டிரைசல்பைடு, தைட்டானியம் செசுக்கியுசல்பைடு என்ற பெயர்களாலும் அழைக்கலாம்.
தைட்டானியம் டைசல்பைடை (TiS2) வெற்றிடத்தில் 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி தைட்டானியம்(III) சல்பைடைத் தயாரிக்கலாம்.[1] தைட்டானியம் டைசல்பைடை உயர் வெப்பநிலைகளில் ஐதரசனுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்க முடியும்.[2] அழுத்தத்திற்கு உட்படுத்தி அல்லது 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் நேரடியாக தனிமங்களை வினைப்படுத்தியும் தைட்டானியம்(III) சல்பைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[2]
தைட்டானியம்(III) சல்பைடு கருப்பு நிறங்கொண்ட தூளாகும்.[1] படிகநிலையில் பளபளப்பான சேர்மமாக இது காணப்படுகிறது.[2] படிகமானது நிக்கல் ஆர்சனைடு கட்டமைப்பில் 6 என்ற அணைவு எண்ணுடன் கூடிய தைட்டானியத்துடன் அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பில் உள்ளது.[1]
தைட்டானியம்(III) சல்பைடு சாதாரண வெப்பநிலையில் காற்று மற்றும் நீரில் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கும். தைட்டானியம் டைசல்பைடு போல ஐதரசன் சல்பைடின் வாசனையை வெளியிடுவதில்லை.
சூடான கந்தக அமிலத்தில் தைட்டானியம்(III) சல்பைடு முதலில் நீலம் கலந்த சாம்பல் நிறத்தில் குழம்பாகவும் பின்னர் ஒரு நிறமற்ற நீர்மமாகவும் மாறுகிறது. ஆனால் குளிர்ந்த செறிவூட்டப்பட்ட கந்தக அல்லது நைட்ரிக் அமிலத்தில் இது பச்சை நிறக் கரைசலை உருவாக்குகிறது. சூடான ஐதரோகுளோரிக் அமிலத்துடன் தைட்டானியம்(III) சல்பைடு ஐதரசன் சல்பைடை உருவாக்குகிறது.[2]