இராஜா தோடர் மால் (Todar Mal) பீகாரில் உள்ள கயையில் பிறந்தவர்.[1][2] பேரரசர் அக்பரின் நிதியமைச்சராக உயர்ந்தவர். வங்காளத்தில் இருந்த காசகம் இவர் கட்டுப்பாட்டில் இருந்தது. அத்தோடு ஆக்ரா மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்கும் இவர் பொறுப்பு வகித்தார். சிதப்பூர் மாவட்ட அரசு இணையதளத்தில் முக்கிய நபர்கள் பெயரில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.[3]
நிதியமைச்சராக இவர் நிலஅளவை முறைகள், எடைகள், வருவாய் மாவட்டங்கள் போன்றவற்றை சீர்செய்தார். இவரை இந்தியாவின் முதல் புள்ளியியலாளராய்க் கருதலாம்.
தோடர்மால் லாகூரில் 08.10.1589 அன்று காலமானார்.