நகர மாண்டிசோரி பள்ளி, லக்னோ

நகர மாண்டிசோரி பள்ளி
அமைவிடம்
லக்னோ, உத்தரப் பிரதேசம்,
இந்தியா
தகவல்
வகைஅரசு சார்பற்ற அமைப்பு
குறிக்கோள்ஜெய் ஜெகத்
(Victory to the World)
நிறுவல்1959
நிறுவனர்ஜெகதீஷ் காந்தி
பாரதி காந்தி
மொத்த சேர்க்கைஏறத்தாழ 64,565[1]
இணைப்புஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE), கேம்பிரிட்ஜ் பன்னாட்டுக் கல்வி மதிப்பீட்டு நிறுவனம் (CAIE)[2]
இணையம்

நகர மாண்டிசோரி பள்ளி (City Montessori School (CMS) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரமான லக்னோ நகரத்தில் அரசு சார்பற்ற அமைப்பினர்[3] நடத்தும் இருபாலர் பள்ளி ஆகும். இப்பள்ளியில் எல். கே. ஜி முதல் மேனிலைப் பள்ளிப் படிப்பு வரை ஆங்கில மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படுகிறது. லக்னோ நகரத்தில் இப்பள்ளி 18 வளாகங்களைக் கொண்டுள்ளது. இப்பள்ளியின் 18 வளாகங்களில் ஏறத்தாழ 64,565 மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். 2020-ஆம் ஆண்டில் ஒரே பள்ளியில் அதிக மாண-மாணவிகள் பயிலும் பள்ளி என கின்னஸ் உலக சாதனைகள் நூலில் இப்பள்ளி இடம் பெற்றுள்ளது..[4]இப்பள்ளியானது இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE), மற்றும் கேம்பிரிட்ஜ் பன்னாட்டுக் கல்வி மதிப்பீட்டு நிறுவனத்துடன் (CAIE) இணைப்பு கொண்டுள்ளது.

இப்பள்ளியை 1959-இல் நிறுவியவர்கள் ஜெகதீஷ் காந்தி மற்றும் பாரதி காந்தி ஆவார்.[5]யுனெஸ்கொ அமைதி மற்றும் விருதை 2002-ஆம் ஆண்டில் இப்பள்ளி பெற்றுள்ளது.[6]

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபையின் 2017-ஆம் ஆண்டின் பள்ளித் தேர்வு முடிவுகளின் படி, முதல் 15 இடங்களில் இப்பள்ளியின் 5 வளாகங்கள் இடம் பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.guinnessworldrecords.com/world-records/largest-school-by-pupils
  2. https://www.cambridgeinternational.org/why-choose-us/find-a-cambridge-school/
  3. United Nations Department of Public Information(10 June 2014). "United Nations Department of Public Information Increases Global Network of Associated Non-Governmental Organizations, Approving 15 More Groups". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 20 Nov 2015.
  4. http://www.guinnessworldrecords.com/world-records/largest-school-by-pupils
  5. School, City Montessori. "City Montessori School". cmseducation.org.
  6. UNCESCO(6 June 2002). "The City Montessori School (India) awarded the 2002 UNESCO prize for Peace Education". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 20 Nov 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]

26°47′23″N 80°53′39″E / 26.7896°N 80.8942°E / 26.7896; 80.8942