நகித் டூபியா | |
---|---|
பிறப்பு | 1951 கர்த்தூம் |
பணி | பல்கலைக்கழகப் பேராசிரியர் |
நகித் டூபியா (Nahid Toubia 1951) சூடான் மருத்துவர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர் ஆவார்.[1] பெண் உறுப்பு சிதைப்பு என்னும் வழக்கத்தை எதிர்த்து நூல்கள் எழுதிப் பரப்புரை செய்து வருபவர்.[2] ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் பெண்களின் நலனுக்காகவும் சமத்துவத்துக்காகவும் பல நூல்களைத் தனியாக எழுதியும் பிறருடன் சேர்ந்தும் எழுதியுள்ளார்.
சூடானில் கார்தம் என்ற ஊரில் பிறந்த டூபியா எகிப்தில் மருத்துவம் பயின்றார்.1981 இல் இங்கிலாந்தில் அறுவை மருத்துவர் பயிற்சி பெற்று எம்பில் மற்றும் ஆய்வுப் பட்டங்களைப் பெற்றார். சூடானில் முதல் பெண் அறுவை மருத்துவர் இவரே. ராயல் கல்லூரியில் மதிப்புமிகு உறுப்பினர் ஆனார்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொதுநலத் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பு அமைப்புகளான யூனிசெப், உலக சுகாதார அமைப்பு, யூஎன்டிபி ஆகியவற்றில் ஆலோசனைக்குழுக்களில் உறுப்பினராக உள்ளார்.
ரெயின்போ என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி அதன் இயக்குநராக உள்ளார். இந்த அமைப்பு பெண்களின் உடல் நலத்தைப் பற்றிய ஆய்வுகள் செய்யவும் தீர்வுகள் காணவும் செயல்படுகிறது. பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு, கண்காணிப்பு அமைப்பில் துணைத் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.