நடபைரவி கருநாடக இசையின் 20 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 ஆவது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட் ஆகும்.
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ |
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | பருலசேவா | இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார் | ரூபகம் |
கிருதி | ஸ்ரீ வள்ளி தேவசேனாபதே | பாபநாசம் சிவன் | ஆதி |
கிருதி | எண்ணுவதெல்லாம் | பெரியசாமி தூரன் | ஆதி |
கிருதி | அம்போருகபாதமே | கோடீஸ்வர ஐயர் | ரூபகம் |
கிருதி | ஐயனே நடனமாடிய | முத்துத் தாண்டவர் | மிஸ்ர ஜம்பை |
கிருதி | நீ பாதமுலனு | முத்தையா பாகவதர் | ஆதி |
பதம் | கையுடன் கூட்டிவாடி | மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி | ஆதி |
நடபைரவியின் ஜன்ய இராகங்கள் இவை.
ஜன்ய ராகங்கள் | குறிப்புகள் |
---|---|
அக்னி கோபம் | [2] |
பைரவி | |
ஆனந்தபைரவி | |
ஹிந்தோளவசந்தம் | |
ஜிங்களா | |
சுத்ததெசி | |
அமிர்தவாஹினி | |
மார்க்கஹிந்தோளம் | |
மாஞ்சி | |
இந்தோளம் | |
பூர்ணஷட்ஜம் | |
சாரமதி | |
ஜயந்தசிறீ | |
ரதிபதிப்பிரியா | |
பாகீரதி | |
கோமேதகப்பிரியா | |
நவரசச்சந்திரிகா | |
சுத்தசாளவி | |
சுத்தரஜ்ஜணி | |
புவனகாந்தாரி | |
திவ்யகாந்தாரி | |
கமலாதரங்கிணி | |
கோபிகாவசந்தம் |
நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
{{cite book}}
: Check |url=
value (help); Missing or empty |title=
(help); Unknown parameter |tittle=
ignored (help)CS1 maint: location (link)