நரேஷ்சந்திர சிங் | |
---|---|
சாரன்கர் அரசின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | 11 ஜனவரி 1946 – 1 சனவரி 1948 |
6th மத்தியப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 13 மார்ச் 1969 – 25 மார்ச் 1969 | |
முன்னையவர் | கோவிந்த் நாராயண் சிங் |
பின்னவர் | சியாம் சரண் சுக்லா |
பழங்குடியின நல அமைச்சர், மத்தியப் பிரதேச அரசு | |
பதவியில் 1955 - 1967 | |
பொதுப்பணித்துறை அமைச்சர், மத்தியப் பிரதேச அரசு | |
பதவியில் 1952 - 1955 | |
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1952 - 1969 | |
பின்னவர் | இராணி இலலிதா தேவி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 நவம்பர் 1908 சத்தீசுகர் |
இறப்பு | 11 செப்டம்பர் 1987 | (அகவை 78)
துணைவர் | இலலிதா தேவி |
பிள்ளைகள் | மேனகா தேவி, பூர்ணிமா தேவி கமலா தேவி, இரஜினி தேவி, புஷ்பா தேவி சிங், சிசிதர் சிங் சிறீ ராஜ் சிங் |
ராஜா நரேஷ்சந்திர சிங் (Nareshchandra Singh) (21 நவம்பர் 1908- 11 செப்டம்பர் 1987), இந்திய மாநிலமான சத்தீசுகரின் ராய்கர் மாவட்டத்தில் சாரன்கர் சுதேச மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார். மேலும் இவர், பிரிக்கப்படாத மத்திய பிரதேசத்தின் முதல்வராகவும் பணியாற்றினார்.[1]
இவர், 1948 ஜனவரி 1 ஆம் தேதி தனது மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் வரை சாரன்கர் அரசின் கடைசி ஆட்சியாளராக இருந்தார். இந்த மாநிலம் இப்போது மத்திய இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. 1946 ஜனவரியில் இறந்த இவரது தந்தை ராஜா பகதூர் ஜவாஹிர் சிங்கிற்குப் பிறகு இவர் பதவியேற்றார். இவரது தந்தையைப் போலவே, ராய்ப்பூரில் உள்ள ராஜ்குமார் கல்லூரியின் பழைய மாணவராகவும், சாரன்கர் மாநில நிர்வாகத்தில் கல்வி அமைச்சராக சேர்க்கப்படுவதற்கு முன்பு ராய்ப்பூர் மாவட்டத்தில் கௌரவ நீதிவானாகப் பணியாற்றினார்.
இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, மத்திய பிரதேச மாநில சட்டமன்றத்திற்காக 1951இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2] 1957 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று சாரன்கர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3] 1962லும்,[4] 1967இலும் புசோர் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார்.[5] 1952ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் பண்டிட் இரவிசங்கர் சுக்லா அமைச்சகத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு மின்சாரம் மற்றும் பொதுப்பணித் துறை வழங்கப்பட்டது. 1954ஆம் ஆண்டில் இவர் பழங்குடியினர் நலனுக்கான குழுவிற்கு தலைமை தாங்கினார். இது பட்டியல் பழங்குடியினரின் நலனைக் கவனிப்பதற்காக அரசாங்கத்திற்குள் ஒரு தனித் துறையை உருவாக்கி, அதற்கு பழங்குடியினர் நல இயக்குநரகம் என்று பெயர் சூட்டப்பட்டது. 1955ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச அரசில் முதல் பழங்குடி நல அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் 1969 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச முதல்வராகும் வரை இந்த பதவியில் தொடர்ந்தார் (13 மார்ச் 1969 முதல் 25 மார்ச் 1969 வரை).[6] அரசியல் நடைமுறையில் வெறுப்படைந்த இவர், தனது முதல்வர் பதவியிலிருந்தும், மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவியிலும் விலகி, அரசியலில் இருந்தும் வெளியேறினார். தனது பிற்காலத்தில் சத்தீசுகர் மக்களின் முன்னேற்றத்திற்காக சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.
1969இல் சட்டமன்றத்தில் இருந்து விலகிய பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது மனைவி ராணி இலலிதா தேவி (நவம்பர் 7, 1987) புசோர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது மகன் ராஜா சிசிர் பிந்து சிங் 7 செப்டம்பர் 2016 வரை சாரன்கர் மாநிலத்தின் மன்னனாக பொறுப்பேற்றார்.[7] இவரது மகள்களில் மூன்று பேர் அரசியலில் நுழைந்தனர்: ரஜினிகாந்தா தேவி 1967-71 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[8] 1971 முதல் 1989 வரை மத்திய பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த கமலா தேவி 15 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தார். புஷ்பா தேவி சிங் 1980, [9] 1991 ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருந்தார். [10] நான்காவது மகள் மேனகா தேவி ஒரு மருத்துவரும், சமூக சேவகரும், கல்வியாளருமாவார். பூர்ணிமா தேவி இவரது இளைய மகள்.[11]
நந்திதா சிங், சந்திரவீர் சிங், மிருணலிகா சிங், திவ்யங்கா குமாரி சிங் , குலிஷா மிஸ்ரா ஆகியோர் இவரது பேரப் பிள்ளைகளாவர்.[7][11]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)