தலைமையிடம் | கோகிமா |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | ஜகதீஷ் மூகி |
முதலமைச்சர் | நைபியு ரியோ |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | ஷரிங்கெய்ன் லாங்குமர் |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | கோகிமா கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம் |
நாகாலாந்து அரசு, இந்திய மாநிலமான நாகாலாந்தின் அரசாகும். இது செயலாக்கப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.
மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அரசின் தலைமையகம், சட்டமன்றம் ஆகியவை கோகிமாவில் உள்ளன. கோகிமாவில் உள்ள குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கிளை மாநில நீதித்துறையின் உயர்ந்த அமைப்பாகும்.[1]
அரசின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவார். தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 60 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். அதிக உறுப்பினர்களை கொண்ட அணி ஆட்சி அமைக்கும். இவர்களில் ஒருவர் முதலமைச்சராகவும், அவர் தேர்வு செய்த உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்பர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[2]