நாதியா சுகாம்சுகா | |
---|---|
படித்த இடங்கள் | MIPT Department of General and Applied Physics |
பணி | வானியல் வல்லுநர் |
விருதுகள் | வானியல் துறையில் நியூட்டன் இலேசி பியர்சுப் பரிசு |
இணையம் | https://physics-astronomy.jhu.edu/directory/nadia-zakamska/ |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | வானியல் |
நாதியா சகாம்சுகா (Nadia Zakamska) ஓர் உருசிய-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[1]
இவர் மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளவல் பட்டமும் 2001 இல் கோட்பாட்டு இயற்பியலில் முதுவர் பட்டமும் பெற்றார். பின்னர் இவர் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு 2005 இல் முனவர் பட்டம் ஈட்டினார்.[1][2]
இவர் வகை இரண்டு குவேசார்களின் பன்முக அலைநீளங்களைப் பற்றி ஆய்வு செய்கிறார்.[3] மேலும் இவர் மீப்பொருண்மைக் கருந்துளைகளைப் பற்றியும் பால்வெளி உருவாக்கத்தின் அவற்றின் பாத்திரம் பற்ரியும் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.[2] மேலும் இவர் புறவெளிக் கோள்கள் பற்றியும் புறவெளிப் பால்வெளி வானியலிலும் பற்றியும் ஆய்வு செய்கிறார்.[2]
சகாம்சுகா சுலோவான் ஆய்வுறுப்பினர்.[1] இவர் 2014 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் நியூட்டன் இலாசி பியர்சு பரிசைப் பெற்றார். இது நோக்கீட்டு வானியலில் குறைந்தது ஐந்தாண்டுகள் தொடர்ஆராய்ச்சிப்பணி புரிந்தவருக்குத் தரப்படுகிறது.[3]