நாபாவான் மாவட்டம் Nabawan District Daerah Nabawan | |
---|---|
ஆள்கூறுகள்: 5°5′N 116°27′E / 5.083°N 116.450°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | உட்பகுதி |
தலைநகரம் | நாபாவான் |
அரசு | |
• மாவட்ட அலுவலர் | புபுதான் ஓ.டி. மயாலு |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,089 km2 (2,351 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 31,807 |
இணையதளம் | www www |
நாபாவான் மாவட்டம்; (மலாய்: Daerah Nabawan; ஆங்கிலம்: Nabawan District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். நாபாவான் (Nabawan Town) நகரம், நாபாவான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
பென்சியாங்கான் மாவட்டம் (Pensiangan District) என முன்பு அறியப்பட்ட இந்த மாவட்டம் 2004-ஆம் ஆண்டில் நாபாவான் மாவட்டம் என்று மறுபெயரிடப்பட்டது.[1]
சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
மாவட்ட நிர்வாகத்தின் வரலாறு 1957-ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த ஆண்டில்தான் நாபாவானில் இருந்து தெற்கே 114 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்சியாங்கானில் இந்த மாவட்டத்திற்குச் சொந்தமான மாவட்ட அலுவலகம் கிடைத்தது.
இந்த மாவட்டப் பகுதியில் சாலைகள் இல்லாததால், படகு அல்லது குதிரை மூலம் மட்டுமே போக்குவரத்துகள் இருந்தன. எனவே பென்சியாங்கான் மாவட்ட அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ய குதிரைகளில் சென்றனர்.
வெளி உலகத்திற்கான தொலைபேசி இணைப்பு கெனிங்காவ் நகரில் இருந்து பென்சியங்கன் வரையிலான நடைபாதையில் போடப்பட்ட ஒரு மின்சுமையற்ற கம்பி ஆகும். தேவைப் பட்டால் தொலைபேசிகளை இதனுடன் இணைக்க முடியும்.
1957-ஆம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் முதல் மாவட்ட அதிகாரியாக ஐ.சி. பெக் (I.C. Peck) என்பவர் நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டில், நாபாவான் மாவட்ட அலுவலகத்தின் நிர்வாகம், புதிதாக நிறுவப்பட்ட அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
ஒன்றிய சபா தேசிய அமைப்பின் இடமாற்றத் திட்டமான நாபாவான் திட்டம் மூலமாகப் புதிய குடியேற்றவாசிகளை இப்பகுதியில் ஈர்க்க முயற்சி செய்யப்பட்டது. குறைவாக ஒருங்கமைக்கப்பட்ட இத்திட்டம் பெரிதும் வெற்றி பெறவில்லை. மேலும் பல குடியேறியவர்கள் பலர் நீண்ட காலம் இங்கு வசிக்க விரும்பவில்லை.[2]
2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாபாவான் மாவட்டத்தின் மக்கள்தொகை 31,807 ஆகும். பெரும்பாலான மக்கள் மூருட் மற்றும் லுன் பாவாங்; லுன் டாயே இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள்.
நாபாவான் மாவட்டம் | குடியிருப்போர் (31,807) |
---|---|
நாபாவான் | 576 |
பென்சியாங்கான் | 307 |
சபுலுட் | 318 |
இதர பகுதிகள் | 30,606 |