நாராயண் ஹேமச்சந்திரன் | |
---|---|
![]() 1890களில் நாராயண் ஹேமச்சந்திரs. | |
பிறப்பு | நாராயண் ஹேமச்சந்திர திவேச்சா 1855 |
இறப்பு | 1904 (அகவை 48–49) |
தொழில் | சுயசரிதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் |
தேசியம் | ![]() |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஹூ போட் (1900) |
நாராயண் ஹேமச்சந்திர திவேச்சா (Narayan Hemchandra Divecha ;1855-1904), பொதுவாக நாராயண் ஹேமச்சந்திரன் என்று அழைக்கப்படும் இவர்[1] ஓர் குஜராத்தி சுயசரிதை, மொழிபெயர்ப்பாளரும் விமர்சகரும் ஆவார். இவர் நிறைய பயணம் செய்தார். சுயசரிதை, புதினங்கள், கதைகள், விமர்சனங்களை எழுதினார். இவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராக இருந்தார். பெங்காலி இலக்கியத்தை குசராத்தில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
நாராயண் ஹேமசந்திரன் தியூ நகரிலுள்ள திவேச்சாவில் 1855 ஆம் ஆண்டில் பிறந்தார். மும்பையில் தனது வாழ்நாளின் அதிக காலத்தை கழித்தார். இவர் அதிகம் படிக்கவில்லை, ஆனால் நிறைய பயணம் செய்தார். இவர் நான்கு முறை இங்கிலாந்து சென்றார். 1875இல், இவர் நவிஞ்சந்திர ராயுடன் அலகாபாத் சென்றார். அங்கு மொழிபெயர்க்கத் தொடங்கினார்.[1]
இவர் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார். காந்தி இவரை இங்கிலாந்தில் சந்தித்து ஒரு விநோத தோற்றமுடைய மற்றும் விநோதமான உடையணிந்த நபர் என்று விவரித்தார். ஆனால் இவர் தனது தோற்றம், உடைகள் அல்லது மோசமான ஆங்கிலம் குறித்து வெட்கப்படவில்லை. சத்திய சோதனையில் காந்தி அவர்களின் இலக்கியங்களைப் படிக்க வெளிநாட்டு மொழிகளைக் கற்க வேண்டுமென்ற இவரது மிகுந்த விருப்பத்தைக் கவனித்தார்.[2]
ஹேமச்சந்திரா சுமார் இருநூறு படைப்புகளை எழுதியிருந்தார்.[1] ஹூ போட் (1900) குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்ட முதல் சுயசரிதை என்றாலும் முதல் சுயசரிதை நர்மத் எழுதியது (1933 இல் வெளியிடப்பட்டது).[3] இது ஓரளவு பயணக்கட்டுரை மற்றும் தனது பயணங்கள் மற்றும் அனுபவங்கள் உட்பட தனது வாழ்க்கையின் முதல் 34 ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளது. இவர் தேபேந்திரநாத் தாகூர் பற்றியும்]] தயானந்த சரசுவதி பற்றியும் எழுதியுள்ளார்.[1]
பஞ்ச் வர்தா (1903), பூல்தானி அனே பிஜி வர்தாவோ (1903) ஆகியவை இவரது கதைகளின் தொகுப்பாகும். வைதீகன்யா (1895), சிநேகுதிர் (1896), ரூப்நகர்னி ராஜ்குன்வாரி (1904) ஆகியவை இவரது புதினங்களாகும். விமர்சனம் குறித்த இவரது படைப்புகளில் பின்வருவன அடங்கும்: ஜீவாஞ்சரித்ரா விஷே சார்ச்சா (1895), சஹிதாய்சார்ச்சா (1896), காளிதாஸ் அனே ஷேக்ஸ்பியர் (1900).[1] குஜராத் மொழி சங்கத்தில் வெளியிடப்பட்ட தர்மிக் புருஷோ (சூன் 1893), சைதன்யர், குரு நானக், கபீர், இராமகிருஷ்ணார் போன்ற பன்னிரண்டு தீர்க்கதரிசிகள் மற்றும் புனிதர்களின் வாழ்க்கை ஓவியங்களைக் கொண்டுள்ளது. [4] இவர் முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். [5]
இவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராக இருந்தார். இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு: டாக்டர் சாமுவேல் ஜான்சன் னு ஜீவன்சரித்ரா (சாமுவேல் ஜான்சனின் வாழ்க்கை வரலாறு, 1839), மாலதிமாதவ் (1893), பிரியதர்ஷிகா மற்றும் சன்யாசி.[1] இவர் இரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் உட்பட குஜராத்தியில் ஏராளமான பெங்காலி படைப்புகளை மொழிபெயர்த்தார்.[1] [5] இவர் இலக்கியம், கல்வி மற்றும் இசை பற்றியும் எழுதியுள்ளார்.[1]