பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) அசைடு
| |
வேறு பெயர்கள்
நிக்கல் டையசைடு, நிக்கல் ஈரசைடு
| |
இனங்காட்டிகள் | |
59865-91-7 | |
ChemSpider | 24772355 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 129630068 |
| |
பண்புகள் | |
Ni(N3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 142.73 கி/மோல் |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS01 |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல் அசைடு (Nickel azide) என்பது Ni(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் நிக்கல் டெட்ராகார்பனைல் மற்றும் அயோடின் அசைடு ஆகியவற்றுக்கு இடையேயான வினை மூலம் இச்சேர்மம் உருவாகும்.[1]
நிக்கல் அசைடு நீர்க் கரைசல் 292 நானோமீட்டரில் உச்சத்துடன் புற ஊதாக் கதிர்களில் அதிக உறிஞ்சுதலைக் கொண்டுள்ளது. இக்கரைசல் 394, 656 மற்றும் 720 நானோமீட்டரில் காணக்கூடிய ஒளி உறிஞ்சுதல் உச்சங்களைக் கொண்ட எக்சா அக்குவாநிக்கல் நேர்மின் அடனிகளையும் கொண்டுள்ளது.[2] தொடர்புடைய நிகோட்டினிக் அமிலம் மற்றும் நிகோட்டினேட்டு கலப்பு எதிர்மின் அயனி சேர்மம் அசைடின் மீது (μ-1,1) என்ற முடிவில் பாலம் அமைத்து ஒருங்கிணைகிறது. மேலும் அணைவுக்குள் இருக்கும் நிக்கல் மற்றும் நைட்ரசனுக்கு இடையே ஓர் அசாதாரண கோணம் அமைகிறது.[3] எல்லா அசைடுகளையும் போல நிக்கல் அசைடும் வெடிக்கும் தன்மை கொண்டிருக்கிறது.