பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்நியோடிமியம்
| |
இனங்காட்டிகள் | |
25764-11-8 | |
ChemSpider | 105116 |
EC number | 247-246-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 117628 |
| |
பண்புகள் | |
NdN | |
வாய்ப்பாட்டு எடை | 158.25 கி/மோல்[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | பாறை உப்பு (கனசதுரம்) |
புறவெளித் தொகுதி | Fm3m (No. 225) |
Lattice constant | a = 512.4 பைக்கோமீட்டர் |
தீங்குகள் | |
GHS pictograms | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம்(III) ஆர்சனைடு நியோடிமியம்(III) பாசுபைடு]] நியோடிமியம்(III) ஆண்டிமோனைடு நியோடிமியம் பிசுமுத்தைடு நியோடிமியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | PrN |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம்(III) நைட்ரைடு (Neodymium(III) nitride) என்பது NdN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இச்சேர்மத்தில் நியோடிமியம் அணுக்கள் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் எஐட்ரசன் அணுக்கள் -3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. கடோலினியம்(III) நைட்ரைடு, டெர்பியம்(III) நைட்ரைடு மற்றும் டிசிப்ரோசியம்(III) நைட்ரைடு சேர்மங்கள் போன்ற பெர்ரோகாந்தப் பண்பு கொண்ட சேர்மமாகும்.[2] நியோடிமியம்(III) நைட்ரைடு பொதுவாக விகிதவியல் அளவில் இருப்பதில்லை. மேலும் தூய விகிதவியல் அளவில் நியோடிமியம்(III) நைட்ரைடை உருவாக்குவது மிகவும் கடினமாகும்.[3]
இலித்தியம் நைட்ரைடு மற்றும் நீரற்ற நியோடிமியம்(III) குளோரைடு ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பவுமிழ் அணுப்பரிமாற்ற வினையின் மூலம் நியோடிமியம்(III) நைட்ரைடு தயாரிக்கப்படுகிறது. வினையில் உருவாகும் இலித்தியம் குளோரைடை டெட்ரா ஐதரோ பியூரானில் கரைத்து நீக்கப்படுகிறது.[4]
நியோடிமியம் நேரடியாக நைட்ரசனுடன் வினைபுரிவதாலும் நியோடிமியம்(III) நைட்ரைடு உருவாகிறது.
நியோடிமியம் அமைடை வேதிச் சிதைவுக்கு உட்படுத்தியும் நியோடிமியம்(III) நைட்ரைடை தயாரிக்கலாம்.
நியோடிமியத்தை காற்றில் பற்ற வைக்கும்போதும் நியோடிமியம்(III) நைட்ரைடு உருவாகிறது. காற்றில் உள்ள நைட்ரசன் வாயு இவ்வினையில் பங்கேற்கிறது.[5] ஆனால் வினையில் நியோடிமியம் ஆக்சைடு போன்ற பிற வேதிப்பொருள்களும் உருவாகும்.