நிவேதா பெத்துராஜ் | |
---|---|
பிறப்பு | 30 நவம்பர் 1990 தூத்துக்குடி தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2015 – தற்போது வரை [1] |
நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj பிறப்பு:30 நவம்பர், 1990)[2] ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 30 நவம்பர் 1990 பிறந்தார். இவர் தந்தையர் பெயர் பெத்துராஜ். அவர் ஒரு தொழில் அதிபர். இவருக்கு ஒரு தம்பி உள்ளார். அவர் பெயர் நிஷாந்த் பெத்துராஜ். இவர் சிறிய வயதாக இருக்கும் போது துபாய் சென்றதால், அந்நாட்டிலே தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தார். [3] [4]
வருடம் | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2016 | ஒரு நாள் கூத்து | காவியா | |
2017 | பொதுவாக எம்மனசு தங்கம் | லீலாவதி | தமிழ் திரைப்படமாகும் |
மென்டல் மடிலோ | சிவேச்சா | தெலுங்கு திரைப்படம் | |
2018 | டிக் டிக் டிக் | சுவாதி | |
திமிரு புடிச்சவன் | இன்ஸ்பெக்டர் மடோனா | ||
2019 | சித்ரலஹாரி | சிவேச்சா | தெலுங்கு திரைப்படம் |
ப்ரோச்சேவரேருரா | ஷாலினி | தெலுங்கு திரைப்படம் | |
சங்கத்தமிழன் | தேன்மொழி | முக்கிய பெண் கதாபாத்திரம் | |
2020 | ஆலா வைகுந்தபுர்ரமுலூ | நந்தினி (நந்து) | தெலுங்கு திரைப்படம் |
பொன் மாணிக்கவேல் | கீதா | வெளிவரயிருக்கும் திரைப்படம் |