நீண்ட மூக்கு மரத்தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | த . லாங்கினசசு
|
இருசொற் பெயரீடு | |
தருகா லாங்கினசசு அக்ல், 1927 |
நீண்ட மூக்கு மரத்தவளை எனும் பொதுவான பெயரில் அழைக்கப்படும் தருகா லாங்கினசசு (Taruga longinasus) மரத்தவளை இராக்கோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இலங்கையில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 150 முதல் 1300 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.[2][3][4]
முதிர்ந்த ஆண் தவளை மூக்குத்தண்டு நீளம் 41 முதல் 47 மிமீ வரையும்; பெண் தவளையில் இது 57 முதல் 60 மிமீ வரையிலும் காணப்படும். தோள்பட்டையின் தோல் அடர் பழுப்பு அல்லது சிவப்பு-பழுப்பு நிறத்திலிருக்கும், மூக்கிலிருந்து ஒவ்வொரு பக்கத்தின் நடுப்பகுதி வரை சிவப்பு நிறக் கோடுகள் காணப்படும். தவளையின் உதடுகள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் கால்கள் பழுப்பு நிறத்தில் அடையாளங்களுடன் உள்ளன.[3]
நீண்ட மூக்கு மரத்தவளைத் தவளைகள் உயர்ந்த மரங்களில் வாழக்குட்டியன. இவற்றால் நன்றாகக் குதிக்க முடியும். முட்டையிடும் நேரம் வரும்போது, முதிர்ந்த தவளைகள் நீரோடைகளுக்கு அருகிலுள்ள மரங்களில் ஏறும். பெண் தவளை ஒரு முறை 28 முதல் 42 முட்டைகளை இடும். முட்டைப் பொரித்து தவளைகளாக வளரப் பத்து வாரங்கள் ஆகும்.[3]
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள், நன்னீர் சதுப்பு நிலங்கள் மற்றும் இடைவிடாத நன்னீர் சதுப்பு நிலங்களாகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1][3]