இந்திய அரசின் சின்னம் | |
தெற்கு பிளாக் கட்டிடம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 2 செப்டம்பட் 1946 |
ஆட்சி எல்லை | இந்தியக் குடியரசு |
தலைமையகம் | சன்சத் பவன், புதுதில்லி |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Ministry of Consumer Affairs, Food and Public Distribution) என்பது இந்திய அரசின் ஒரு அமைச்சகமாகும். இந்த அமைச்சகத்தை அமைச்சர் பியூஷ் கோயல் நிர்வகிக்கிறார்.[1] இந்த அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை மற்றும் நுகர்வோர் நலன் துறை ஆகிய இருப்பிரிவுகள் உள்ளன.
நுகர்வோர் கூட்டுறவு, விலை கண்காணிப்பு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
இந்தியாவில் சுமார் 79 கோடி பேர் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். பயனர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு, ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டம் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த இந்திய அரசு முடிவு செய்ததுள்ளது. இதன்மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை பெற முடியும் . “ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை 15 சனவரி 2020 முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செய்துள்ளது.. முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியபிர தேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்ளது. [3][4]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)