நெடுங்கண்டம் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°50′35″N 77°09′07″E / 9.843°N 77.1519°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | நெடுங்கண்டம் கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 71.95 km2 (27.78 sq mi) |
ஏற்றம் | 900−1,190 m (−3,000 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 41,980 |
• அடர்த்தி | 580/km2 (1,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 685553 |
தொலைபேசி குறியீட்டு எண் | 04868 |
வாகனப் பதிவு | கேஎல்-69, கேஎல்-37 |
அருகிலுள்ள நகரங்கள் | கட்டப்பனை, அடிமாலி, மூணார் |
மக்களவைத் தொகுதி | இடுக்கி |
கேரள சட்டமன்றத் தொகுதி | உடும்பன்சோலை |
தட்பவெப்ப நிலை | குளிர்காலத்தில் 10c க்கு வரலாம். (கோப்பென்) |
நெடுங்கண்டம் (Nedumkandam) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள உடும்பன்சோலை வட்டத் தலைமையகமாகும். இது இடுக்கி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். நெடுங்கண்டம் அதன் மசாலா உற்பத்திக்கு நன்கு அறியப்பட்டதாகும். மேலும், ஏலக்காய், மிளகு போன்ற மசாலாப் பொருட்களின் உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரபலமான குமுளி - மூணார் சுற்றுலாப் பாதையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த செலவில் தங்குவதற்கும், பொருட்களை வாங்குவதற்கும் ஏற்ற இடமாகும்.
புவியியல் ரீதியாக, பெரியாற்றுத் தேசியப் பூங்கா, தேக்கடி , மூணார் மலைப்பகுதிக்கு இடையே நெடுங்கண்டம் அமைந்துள்ளது. இது புலம்பெயர்ந்த விவசாயிகளின் நிலம் என்று அறியப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் மத்திய திருவிதாங்கூர் பகுதிகளான கோட்டயம், பாளை,கோதமங்கலம், மூவாற்றுப்புழை போன்ற பகுதிகளிலிருந்து 1960கள் முதல் 1980களில் சிறந்த விவசாய நிலங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.[2] நவீன நெடுங்கண்டத்தை ஆக்கிரமித்துள்ள நிலம், நிலத்தின் பாரம்பரிய குடிமக்களான பூர்வீக பழங்குடி மக்களிடமிருந்து புலம்பெயர்ந்தவர்களால் வாங்கப்பட்டது அல்லது மேற்கு தொடர்ச்சி மலையின் அப்போதைய பசுமையான மழைக்காடுகளிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த காடுகளில் பெரும்பாலானவை இப்போது விவசாய நிலங்களாக மாறிவிட்டன அல்லது நவீன நகரத்திற்கு வழிவிட்டன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முக்கிய விவசாயப் பயிர்கள் ஏலக்காய், மிளகு , காப்பி போன்ற பணப்பயிர்களாகும். தேயிலை, இஞ்சி, கிராம்பு, கோகோ, சாதிக்காய் போன்ற பல்வேறு வகையான பணப்பயிர்களும் உள்ளன. மேலும் சில பகுதிகளில் புவியியல் நிலைமைகளுக்கு ஏற்ப சிறிய அளவில் வேறு பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
நெடுங்கண்டம் நகரம் மாநில நெடுஞ்சாலை 19 (கேரளா), மாநில நெடுஞ்சாலை 40 (கேரளா), மாநில நெடுஞ்சாலை 42 (கேரளா) ஆகியவற்றின் ஓரங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இந்த மூன்று புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு இடையே கிட்டத்தட்ட 3 கி.மீ. நடுவில் அமைந்துள்ளது. நான்கு தசாப்தங்களுக்கும் குறைவான வரலாற்றைக் கொண்ட நகரமாக, அறுபதுகளின் ஆரம்பம் வரை யானைகள் நடமாடிய அந்தக் காலப்பகுதியில் கேரளாவின் தாழ்வான பகுதிகளிலிருந்து அதிக அளவில் இடம்பெயர்ந்ததற்கு இது ஒரு சான்றாகும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், வணிக மையங்களுக்கு மத்தியில் ஏராளமான அரசு அலுவலகங்கள் ஆகியவற்றைக் கொண்ட அண்டை கிராமங்களுக்கு இது ஒரு பெரிய நகரமாக உருவாகியுள்ளது. மிளகு, ஏலக்காய் ஆகியவை பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரங்கள். மிளகு சாகுபடி பெரும்பாலும் மலையாளிகளின் செயலாக உள்ளது. பொதுவாக 10 சென்ட் முதல் 5 ஏக்கர்கள் (20,000 m2) வரையிலான சிறிய அளவிலான நிலங்களையே கொண்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஒன்றிரண்டு மாடுகள் பொதுவானவை. விடியற்காலையில், நெடுங்கண்டத்தைச் சுற்றியுள்ள மலைகளில் வசிப்பவர்கள் கொச்சி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு பால் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
ஏலக்காய் பண்ணைகள் பெரியவை . மேலும் ஏறக்குறைய பாதி உரிமையாளர்கள் தமிழர்கள். அவர்களின் முன்னோர்கள் ஏலக்காய் மலை காப்புப் பகுதிகளின் வன மண்ணை வளர்ப்பதற்காக தமிழ்நாட்டின் கம்பம், போடிநாயக்கனூர் பகுதிகளில் இருந்து மலைப்பாதையில் ஏறிச் சென்றுள்ளனர். இராமக்கல்மேடு, கைலாசபரை, தூவல் அருவி, கல்லுமேகல்லு, மண்குத்திமேடு, நெய்யாண்டிமலை ஆகியவை அருகிலுள்ள சுற்றுலா இடங்களாகும்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)