நேகா சக்சேனா (திரைப்பட நடிகை) Neha Saxena | |
---|---|
![]() 2022 இல் விளம்பர மாதிரியுரு புகைப்படமெடுப்ப்பின் போது | |
பிறப்பு | 25 அக்டோபர் 1989[1] தேராதூன், உத்தரகண்ட், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கசப, சகாவிண்டெ பிரியசகி, ஆராட்டு |
நேகா சக்சேனா (Neha Saxena) மலையாளம், துளு, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். மம்முட்டியுடன் கசப (2016) மற்றும் மோகன்லாலுடன் முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் மற்றும் ஆறாட்டு போன்ற மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். [2] [3] [4]
நேகா அக்டோபர் 25, 1989 இல் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான தேராதூனில் பிறந்தார். [5] நேகா பிறப்பதற்கு முன்பே ஒரு விபத்தில் தந்தையை இழந்தார். அவரது தாயாருடன் வளர்த்துள்ளார்.[6]