நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு | |
---|---|
संघीय समाजवादी फोरम, नेपाल | |
சுருக்கக்குறி | FSFN |
தலைவர் | உபேந்திர யாதவ் ராஜேந்திர சிரேஸ்தா |
பொதுச் செயலாளர் | ராம் சகாய் யாதவ் |
தொடக்கம் | சூன் 15, 2015 |
இணைந்தவை | நேபாள மாதேசி ஜன அதிகார மையம் பெடரல் சோசலிஸ்ட் கட்சி கஸ் சமபேசி கட்சி |
தலைமையகம் | தின்குனே, காட்மாண்டு, நேபாளம் |
இளைஞர் அமைப்பு | இளைஞர் கூட்டமைப்பு ஒன்றியம் |
மாணவர் அணி | சோசலிச மாணவர் கூட்டமைப்பு |
மகளிர் அணி | பெடரல் சோசலிச மகளிர் மையம் |
கொள்கை | ஜனநாயக சோசலிசம் சமய சார்பின்மை முன்னேற்றம் இனக்குழுக்களின் இணக்கம் |
அரசியல் நிலைப்பாடு | மைய-இடது - இடதுசாரி அரசியல் |
நேபாள பிரதிநிதிகள் சபையில் | 16 / 275
|
நேபாள தேசிய சபையில் | 2 / 59
|
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
federalsocialist |
நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு (Federal Socialist Forum, Nepal) (நேபாளி: संघीय समाजवादी फोरम, नेपाल; சுருக்கப் பெயர் FSFN) நேபாளத்தின் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். நேபாளத்தின் தராய் பகுதிகளின் பல வட்டார கட்சிகளின் இணைப்பால் இக்கட்சி 15 சூன் 2015 அன்று நிறுவப்பட்டது.[1]உபேந்திர யாதவ் மற்றும் இராஜேந்திர சிரேஸ்தா ஆகியவர்கள் இக்கட்சியின் நிறுவனத் தலைவர்கள் ஆவார்.
இக்கட்சி 2017 நேபாள உள்ளாட்சித் தேர்தலில், 34 மேயர் பதவிகளையும், 32 துணைமேயர் பதவிகளையும், 262 வார்டு தலைவர் பதவிகளையும், 1,111 வார்டு உறுப்பினர்கள் பதவிகளையும் கைப்பற்றியது. [2]
2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தலில், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு இக்கட்சி 16 இடங்களை வென்று, தேசிய அளவில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.[3] The party was one of five parties to be declared "national parties".[4]மேலும் நேபாள தேசிய சபையில் இக்கட்சி இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2017 நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. [5]
நேபாள மாநில எண் 2ன் சட்டமன்றத்தில் 29 இடங்களையும், நேபாள மாநில எண் 1ல் 3 இடங்களையும், நேபாள மாநில எண் 5ல் 5 இடங்களையும் கைப்பற்றியது. [6][7]
நேபாள மாநில எண் 2ன் சட்டமன்றத்தில் இக்கட்சி, நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. [8][9] நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது லால்பாபு ரவுத் நேபாள மாநில எண் 2ன் கூட்டணி அரசின் முதலமைச்சராக பதவியேற்றார்.[10][11]
இக்கட்சி கூட்டாச்சித் தத்துவம் மற்றும் சோசலிசம் ஆகிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.
தேர்தல் | தலைவர் | வாக்குகள் | இடங்கள் | தர வரிசை | ஆட்சி அமைத்தல் | |
---|---|---|---|---|---|---|
நேபாள பிரதிநிதிகள் சபை | உபேந்திர யாதவ் | 470,201 | 4.93 | 16 / 275 |
5ம் இடம் | மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்- மாவோயிஸ்ட் |
நேபாள மாநில எண் 2ல் இக்கட்சி நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளது.
பெயர் | படம் | பதவிக் காலம் |
---|---|---|
முகம்மது லால்பாபு ரவுத் | 2018-தற்போது வரை |