நையோபியம் ஐந்தயோடைடு(Niobium pentaiodide) என்பது Nb2I10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் எதிர்காந்தப் பண்புடன் ஈரத்திற்கு ஒவ்வாததாய் விளங்குகிறது. உலோகநையோபியத்துடன்அயோடின் சேர்த்து சூடுபடுத்தினால் நையோபியம் ஐந்தயோடைடு உருவாகிறது[1] . எக்சு-கதிர் விளிம்பு விலகல் பகுப்பாய்வு முறையில் இதனுடைய படிக அமைப்பு சரிபார்க்கப்பட்டதில், விளிம்பில் பகிர்ந்து கொண்டுள்ள இரட்டை எண்முக அமைப்பு கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. டாண்ட்டலம் மற்றும் நையோபியத்தின் பல ஐந்தாலைடுகளுக்கும் இதே படிக அமைப்பே அறியப்படுகிறது. விளிம்பில் உள்ள Nb-I பிணைப்புகளை விட நீளத்தை விட அயோடைடுகளின் பிணைப்பு 0.3 Å அளவுடன் நீளமாக உள்ளது[2]
↑G. Brauer "Hydrogen, Deuterium, Water" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 2. p. 1315.
↑Krebs, Bernt; Sinram, Diethard "Darstellung, Struktur und Eigenschaften einer neuen Modifikation von NbI5 (Preparation, structure and properties of a new modification of NbI5" Zeitschrift fǔr Naturforschung, Teil B: Anorganische Chemie, Organische Chemie 1980, volume 35b, pp. 12-16.