நொபொரு காராசிமா

நொபொரு காராசிமா
Noboru Karashima
பிறப்பு(1933-04-24)ஏப்ரல் 24, 1933
சப்பான்
இறப்புநவம்பர் 26, 2015(2015-11-26) (அகவை 82)
பணிபேராசிரியர், எழுத்தாளர், வரலாற்றாளர்
விருதுகள்ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு
பத்மசிறீ

நொபொரு காரசிமா (Noboru Karashima, 辛島昇, 24 ஏப்ரல் 1933 - 26 நவம்பர் 2015)[1][2] சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். இவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர் (1989-2010) ஆவார்.[3][4]

நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். இவர் 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாக கூறினார்.[4] 2013ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5][6]

மறைவு

[தொகு]

உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989-ஆம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றிய நொபுரு கரஷிமா தனது 82-ஆவது வயதில் ஜப்பானில், 26 நவம்பர் 2015 அன்று (வியாழக்கிழமை) மறைந்தார்[7]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • Ancient Medieval South Indian Society in Transition (Oxford Collected Essays)-2010
  • A Concise History of South India: Issues and Interpretations (2014)
  • A Concordance of Nayakas: The Vijayanagar Inscriptions in South India (2002)
  • Towards a New Formation: South Indian Society under Vijayanagar Rule (1993)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil scholar who inspired a generation". தி இந்து. 27 November 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
  2. "ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார்". பிபிசி தமிழ். 26 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-17.
  4. 4.0 4.1 http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece
  5. "List of Padma Awardees" (PDF) (pdf). Ministry of Home Affairs, India. Archived from the original (PDF) on 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2013-05-17.
  6. ஜப்பானிய தமிழறிஞருக்கு "பத்மஸ்ரீ' விருது, தினமணி, 29 மே 2013
  7. ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார்

வெளியிணைப்புகள்

[தொகு]