பகாட் கஞ்சு

பகாட்கஞ்ச்
Paharganj
புறநகர்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
அரசு
 • நிர்வாகம்தில்லி மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
மக்களவைத் தொகுதிபுது தில்லி மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிபகாட்கஞ்சு

பகாட்கஞ்சு (பகார்கஞ்ச், இந்தி: पहाड़गंज, உருது: پہاڑ گنج, பஞ்சாபி மொழி: ਪਹਾੜਗਂਜ, பொருள்: மலைப் பகுதி) என்னும் பகுதி, மத்திய தில்லியில் உள்ளது. இந்த பகுதியின் கிழக்கில் புது தில்லி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. முகலாயப் பேரரசின் காலத்தில் இந்தப் பகுதி ஷாகஞ்சு என்று அழைக்கப்பட்டது.[1] இதுவும் கரோல் பாகும், தர்யா கஞ்சும் மத்திய தில்லியின் மூன்று ஆட்சிப் பிரிவுகள்.

இங்கு உணவகங்களும், விடுதிகளும் அதிகமுள்ள காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் விரும்புமிடமாக உள்ளது. பல்வேறு நாட்டு உணவுமுறைகளில் சமைக்கப்படும் உணவுகளும் இங்கு விற்கப்படுகின்றன.[2][3]

ஆட்சியும் அரசும்

[தொகு]

இந்த பகுதி சதர் பசார் - பகாட்கஞ்ச் என்ற பெயரில், தில்லி மாநகராட்சியின் 12 ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.[4]

2008ஆம் ஆண்டு முதல் இந்த பகுதி புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5]

சான்றுகள்

[தொகு]
  1. Great Britain, Parliament. House of Commons (1859). House of Commons papers, Volume 18. HMSO. p. 8.
  2. Manali in Paharganj! பரணிடப்பட்டது 2008-02-25 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 26 June 2006.
  3. Paharganj: A Traveler’s Delight www.delhilive.com, 11 January 2008.
  4. Zones பரணிடப்பட்டது 2009-01-09 at the வந்தவழி இயந்திரம் தில்லி மாநகராட்சி.
  5. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 556. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-09-14.

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பகாட் கஞ்சு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.