பகேல்கண்ட் முகமை | |||||
பிரித்தானிய இந்தியாவின் அரசியல் முகமை | |||||
| |||||
மத்திய இந்திய முகமையின் கிழக்கில் 3 பகேல்கண்ட் முகமையின் பகுதிகள் | |||||
வரலாற்றுக் காலம் | குடிமைப்பட்ட கால இந்தியா | ||||
• | நிறுவப்பட்டது | 1871 | |||
• | Disestablished | 1933 | |||
பரப்பு | |||||
• | 1901 | 37,100 km2 (14,324 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 15,55,024 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 41.9 /km2 (108.6 /sq mi) |
பகேல்கண்ட் முகமை (Bagelkhand Agency), குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த மத்திய இந்தியாவின் பகேல்கண்ட் பிரதேசத்தின் சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் இம்முகமை 1871-ஆம் ஆண்டு முதல் 1933-ஆம் ஆண்டு முடிய செயல்பட்டது.
1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பகேல்கண்ட் முகமையின் மொத்த பரப்பளவு 14,323 சதுர மைல்கள் (37,100 km2) மற்றும் மக்கள் தொகை 15,55,024 ஆகும். கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால், 1891-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பை விட 1901-ஆம் ஆண்டில் மக்கள் 11% வீழ்ச்சி கண்டது. 1933-ஆம் ஆண்டில் பகேல்கண்ட் முகமையை புந்தேல்கண்ட் முகமையுடன் இணைக்கப்பட்டது.[1]
1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் பகேல்கண்ட் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், 1948-ஆம் ஆண்டில் புதிய விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று விந்தியப் பிரதேசம், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.