பக்தி குல்கர்னிBhakti Kulkarni | |
---|---|
நாடு | இந்தியா |
பிறப்பு | 1992 மே 19 கோவா, இந்தியா |
பட்டம் | கிராண்டு மாசுட்டர் (2012) |
பக்தி குல்கர்ணி (Bhakti Kulkarni) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார் [1]). கோவாவைச் சேர்ந்த இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் பிறந்தார். 2012 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண்கள் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆனார் [2].
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் குல்கர்னி வெற்றி பெற்றார் [3].. 2013 இல் செக் குடியரசின் விசோனியாவில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார் [4].. 2016 ஆம் ஆண்டிலும் ஆசிய பெண்கள் சதுரங்கச் சாம்பியன் பட்டத்தை இவர் வெற்றி கண்டார் [5].
2009, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய குழு சாம்பியன் பட்டப் போட்டியில் இந்திய அணியின் சார்பாக குல்கர்னி கலந்து கொண்டு விளையாடினார். 2009 ஆம் ஆண்டு தனிநபர் பிரிவில் மட்டும் வெண்கலப் பதக்கத்தை இவர் கைப்பற்றினார் [6].
{{cite web}}
: External link in |last=
(help)
{{cite web}}
: External link in |last=
(help)