சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் மூலம் பங்களாதேசத்தில் பெண்ணியம் சம உரிமைகளை நாடுகிறது. பங்களாதேச அரசியலமைப்பு பிரிவு 28 வது பிரிவு கீழ்கண்டவாறு விவரிக்கிறது "மாநிலம் மற்றும் பொது வாழ்வின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமான உரிமை உண்டு" என்று கூறுகிறது.[1]
பங்களாதேச பெண்ணியவாதிகள்
[தொகு]
- பேகம் ரோக்கியா (Begum Rokeya) ஒரு குறிப்பிடத்தக்க முஸ்லீம் பெண்ணியவாதி.
- காமினி ராய் (Kamini Roy) பிரித்தானிய இந்தியாவின் முதல் பட்டதாரிப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
- சுல்தானா கமால் (Sultana Kamal) ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்.ஐன் ஓ சாலிஷ் கேந்த்ரா என்ற சமூக உரிமைகளுக்கான ஒரு அமைப்புக்கான நிர்வாக இயக்குனராக பணியாற்றுகிறார்.