நோயெதிர்ப்பியலில்படியாக்க நீக்கம் (Clonal Deletion) என்பது தன்னுடல் தாக்கும் திறனுள்ள "டி" மற்றும் "பி" வெள்ளையணுக்களைநோய் எதிர்ப்பு அமைப்பு தொகுதியிலிருந்து அகற்றும் செயல்முறையாகும்.[1][2] இம்முறையானது, நம் உடலுக்குச் சொந்தமான செல்களை நோயெதிர்ப்பு உயிரணுக்கள் அடையாளம் கண்டு அழிப்பதைத் தடுக்க உதவுகிறது. இம் முறையை "எதிர்முறை தேர்வு" (negative selection) எனலாம். இப் படியெடுப்பு நீக்கம், உடலின் மையப் பொறுதியில் (சகிப்புத்தன்மையில்) முக்கியப் பங்காற்றுகிறது.[3] படியெடுப்பு நீக்கம், தன்னுடல் தாக்குநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சகிப்புத்தன்மையின்போது ஓம்புயிரியால் பயன்படுத்தப்படும் பல முறைகளில் படியெடுப்பு நீக்கமும் ஒன்றாகும்.
↑Russell, John H. (1998-01-01), "Clonal Deletion", in Delves, Peter J. (ed.), Encyclopedia of Immunology (Second Edition), Oxford: Elsevier, pp. 569–573, ISBN978-0-12-226765-9, retrieved 2024-04-23