பத்தாங் லுப்பார் (P201) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Batang Lupar (P201) Federal Constituency in Sarawak | |
![]() பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி (P201 Batang Lupar) | |
மாவட்டம் | சிமுஞ்சான் மாவட்டம் பூசா மாவட்டம் காபோங் மாவட்டம் செரி அமான் மாவட்டம் |
வட்டாரம் | சமரகான் பிரிவு பெத்தோங் பிரிவு செரி அமான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 43,072 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கூச்சிங்; இலுண்டு |
பரப்பளவு | 1,990 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | முகமது சபிசான் கெப்லி (Mohamad Shafizan Kepli) |
மக்கள் தொகை | 38,339 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batang Lupar; ஆங்கிலம்: Batang Lupar Federal Constituency; சீனம்: 巴当卢帕尔联邦选区) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவு; பெத்தோங் பிரிவு; செரி அமான் பிரிவு ஆகிய 3 பிரிவுகளில்; சிமுஞ்சான் மாவட்டம்; பூசா மாவட்டம்; காபோங் மாவட்டம்; செரி அமான் மாவட்டம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P201) ஆகும்.[5]
பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
செரி அமான் பிரிவு (Sri Aman Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். முன்பு செரி அமான் பிரிவு; சரவாக்கின் இரண்டாம் பிரிவின் (Second Division) ஒரு பகுதியாக இருந்தது. இது முன்பு சிமாங்காங் மாவட்டம் (Simanggang District) என்று அழைக்கப்பட்டது.[7]
1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரிவு (Division) முறை இன்றும் நீடிக்கிறது. முன்பு ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும்.
செரி அமான் பிரிவின் மொத்த பரப்பளவு 5,466.7 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிபு பிரிவின் மக்கள் தொகை 111,400. இன ரீதியாக, மக்கள்தொகை பெரும்பாலும் இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் மக்களாகும். இவர்களில் சீனர் மக்கள் தான் பெரும்பான்மையில் உள்ளனர்.
செரி அமான் பிரிவில் பத்தாங் ஆய் தேசியப் பூங்கா (Batang Ai National Park) உள்ளது; மாலுடாம் தேசியப் பூங்கா (Maludam National Park) ஆகிய புகழ் வாய்ந்த தேசிய பூங்காக்கள் சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.
பத்தாங் லுப்பார் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]
பத்தாங் லுப்பார் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
பத்தாங் லுப்பார் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
பத்தாங் லுப்பார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பத்தாங் லுப்பார் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9] | |||
3-ஆவது மக்களவை | P128 | 1971-1974 | எட்வின் தங்குன் (Edwin Tangkun) |
சரவாக் தேசிய கட்சி (SNAP) |
4-ஆவது மக்களவை | P138 | 1974-1978 | ||
5-ஆவது மக்களவை | 1978-1982 | பாரிசான் நேசனல் (சரவாக் தேசிய கட்சி) (SNAP) | ||
6-ஆவது மக்களவை | 1982-1986 | சுயேச்சை | ||
7-ஆவது மக்களவை | P161 | 1986-1990 | டேனியல் தாஜம் மிரி (Daniel Tajem Miri) |
பாரிசான் நேசனல் (சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS) |
8-ஆவது மக்களவை | P162 | 1990-1995 | வான் சுனைடி துங்கு ஜாபார் (Wan Junaidi Tuanku Jaafar) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
9-ஆவது மக்களவை | P174 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | P175 | 1999-2004 | ||
11-ஆவது மக்களவை | P201 | 2004-2008 | ரொகானி அப்துல் கரீம் (Rohani Abdul Karim) | |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமட் சபிசான் கெப்லி (Mohamad Shafizan Kepli) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமது சபிசான் கெப்லி (Mohamad Shafizan Kepli) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 19,627 | 71.22 | 71.22 ![]() | |
அம்டான் சனி (Hamdan Sani) | பெரிக்காத்தான் நேசனல் (PN) | 5,164 | 18.74 | 18.74 ![]() | |
வெல் மெக்சுவல் ரொசிஸ் (Well Maxwel Rojis) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 2,768 | 10.04 | 0.02 ![]() | |
மொத்தம் | 27,559 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 27,559 | 98.01 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 559 | 1.99 | |||
மொத்த வாக்குகள் | 28,118 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 43,072 | 65.28 | 3.83 ▼ | ||
Majority | 14,463 | 52.48 | 1.48 ![]() | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)