பத்து (கோலாலம்பூர்) Batu | |
---|---|
புறநகர் | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | |
நாடு | மலேசியா |
கூட்டரசு | கோலாலம்பூர் |
தொகுதி | பத்து, கோலாலம்பூர் |
அமைவு | கோலாலம்பூர் |
அரசு | |
• நகராண்மை | கோலாலம்பூர் மாநகர் மன்றம் |
• கோலாலம்பூர் மாநகர முதல்வர் | டத்தோ ஸ்ரீ மகாடி செ நிகா |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 55100 |
மலேசியத் தொலைபேசி எண் | +603-2, +603-4 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W ; V |
இணையதளம் | www.dbkl.gov.my |
பத்து (ஆங்கிலம்: Batu; மலாய்: Batu) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். செந்தூல் மற்றும் பத்து மலை ஆகிய இடங்களின் இடைப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது.[1]
பத்து நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாக பத்து புறநகர்ப் பகுதி உள்ளது. இந்தியர்கள் அதிகமாக வாழும் செந்தூல் பகுதியும் இதன் தொகுதியில் அடங்கும். இந்தத் தொகுதியில் அரசாங்கம் கட்டிக் கொடுத்த அதிகமான பொது குடியிருப்புகள் (Projek Perumahan Rakyat) உள்ளன.
மலேசியாவில் புகழ்பெற்ற குகைக் கோயில் பத்துமலை (Batu Caves), இந்தத் தொகுதியில்தான் உள்ளது. கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது.
பத்துமலை கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. பத்துமலைச் சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (மலாய்: Sungai Batu; ஆங்கிலம்: Batu River) பெயரிலிருந்து இந்த இடமும் பெயரைப் பெற்றது.
பத்து புறநகர்ப் பகுதியில் சிரம்பான் தொடருந்து (KTM Komuter 1 Seremban Line) உள்ளது. KC04 தாமான் வாயூ தொடருந்து நிலையம்; KC03 கம்போங் பத்து தொடருந்து நிலையம்; பத்து கண்டோண்ட்மண்ட் தொடருந்து நிலையம்; ஆகிய நிலையங்களில் KC02 தொடருந்துகள் நின்று செல்கின்றன.
எதிர்காலத்தில், PY13 கம்போங் பத்து தொடருந்து நிலையம்; PY14 பத்து தொடருந்து நிலையம்; PY15 ஜாலான் ஈப்போ தொடருந்து நிலையம்; ஆகிய நிலையங்களில் புத்ராஜெயா தொடருந்து சேவை (MRT Putrajaya Line) அமல்படுத்தப்பட உள்ளது.
பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கான தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் ஹரப்பான் (PKR) கட்சியைச் சேர்ந்த பிரபாகரன் பரமேஸ்வரன் ஆவார். 2018 மலேசியப் பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மலேசிய அரசியல் வரலாற்றில் 22 வயதில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.[2]