பத்து காஜா (P066) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Batu Gajah (P066) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கிந்தா மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 111,896 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பத்து காஜா தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | ஈப்போ, பத்து காஜா, தஞ்சோங் துவாலாங், துரோனோ, கிளேடாங், பூசிங், சிம்பாங் பூலாய் |
பரப்பளவு | 216 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | வி. சிவகுமார் (Sivakumar Varatharaju Naidu) |
மக்கள் தொகை | 137,227 (2020) [4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பத்து காஜா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu Gajah; ஆங்கிலம்: Batu Gajah Federal Constituency; சீனம்: 怡保东区国会议席) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P066) ஆகும்.[7]
பத்து காஜா மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பத்து காஜா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பத்து காஜா நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது. 1870-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட நகரம். 1874-ஆம் ஆண்டில், பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் ஜேம்ஸ் பர்ச் இந்த நகரத்திற்கு வந்த போது, அங்கு ஈயச் சுரங்கங்கள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் புகழ்பெற்ற கெல்லீஸ் கோட்டையகம் இங்குதான் உள்ளது. இந்த மாளிகை சர் வில்லியம் கெல்லி என்பவரால் 1915-ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இவர் தம்மிடம் வேலை செய்த இந்திய தொழிலாளர்களுக்கு மாரியம்மன் கோயிலையும் கட்டிக் கொடுத்தார்.
கிந்தா ஆற்றின் மருங்கில் இரு பெரும் கல் பாறைகள் இருந்தன. யானைகளைப் போல வடிவம் கொண்ட அந்தக் கல் பாறைகள் உள்ளூர் கிராம மக்களால் செதுக்கப் பட்டவை. கிராம மக்கள் பயிர் செய்த கரும்புகளைக் காட்டு யானைகள் நாசம் செய்து வந்தன. அந்த யானைகளைப் பயமுறுத்துவதற்காகக் கல் பாறைகள் செதுக்கி வைக்கப் பட்டன எனும் நாட்டுப்புறக் கதை இங்கு உள்ளது.
பத்து காஜா ஈயச் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்ற இடமாகும். சீனாவில் இருந்து இங்கு வந்து குடியேறிய சீனர்கள், ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தனர். அதனால், இன்றும் இந்த நகரில் அதிகமான சீனர்களைக் காண முடியும்.
ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1959-ஆம் ஆண்டில் கிந்தா செலாத்தான் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P052 | 1959–1963 | கோங் கோக் யாட் (Khong Kok Yat) |
மக்கள் முற்போக்கு கட்சி |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P052 | 1963–1964 | கோங் கோக் யாட் (Khong Kok Yat) |
மக்கள் முற்போக்கு கட்சி |
2-ஆவது மக்களவை | 1964–1969 | நிங் பா யாம் (Ng Fah Yam) |
மலேசிய கூட்டணி (அம்னோ) | |
1969–1971 | நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8] | |||
3-ஆவது மக்களவை | P052 | 1971–1974 | லிம் சோ ஒக் (Lim Cho Hock) |
ஜனநாயக செயல் கட்சி |
4-ஆவது மக்களவை | P058 | 1974–1978 | சியான் எங் காய் (Chian Heng Kai) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | பான் கோன் கியோங் (Ban Hon Keong) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) | |
7-ஆவது மக்களவை | P060 | 1986–1990 | திங் செக் மிங் ( Ting Chek Ming) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990–1995 | பூ பியூகோக் (Foo Piew Kok) | ||
9-ஆவது மக்களவை | P063 | 1995–1999 | இயோங் சி வா (Yeong Chee Wah) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | போங் போ குவான் (Fong Po Kuan) |
மாற்று முன்னணி (ஜனநாயக செயல் கட்சி) | |
11-ஆவது மக்களவை | P066 | 2004–2008 | ஜனநாயக செயல் கட்சி | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | வி. சிவகுமார் (Sivakumar Varatharaju Naidu) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
111,896 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
75,935 | 67.86% | ▼ - 10.52% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
74,955 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
155 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
825 | ||
பெரும்பான்மை (Majority) |
53,836 | 71.82% | + 1.95 |
வெற்றி பெற்ற கட்சி (Hold) |
பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [9] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
வி. சிவகுமார் (Sivakumar Varatharaju Naidu) |
பாக்காத்தான் | 74,955 | 60,999 | 81.38% | - 2.79% ▼ | |
ஊ சியோங் யுவென் (Woo Cheong Yuen) |
பெரிக்காத்தான் | - | 7,163 | 9.56% | + 9.56% | |
தியோ சின் சோங் (Teoh Chin Chong) |
பாரிசான் | - | 6,793 | 9.06% | - 5.25 % ▼ |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)