பயல் சக்யா Payal Shakya | |
---|---|
சிட்னியில் மொய் முடி திருத்தகம் திறப்பு விழாவில் | |
தாய்மொழியில் பெயர் | पायल शाक्य |
பிறப்பு | 14 சனவரி 1986 காட்மாண்டு, நேபாளம் |
தேசியம் | ஆத்திரேலியன் |
பணி | வடிவழகி |
அறியப்படுவது | நேபாள உலக அழகி 2004 |
உயரம் | 1.65 m (5 அடி 5 அங்) |
பட்டம் | நேபாள உலக அழகி 2004 |
முன்னிருந்தவர் | பிரிதி சிட்டூலா |
பின்வந்தவர் | ச்கரிகா கேசி |
வாழ்க்கைத் துணை | சரூன் தம்ரகர் (2011 முதல்) |
பிள்ளைகள் | சாகசு தம்ரகர் |
பயல் சக்யா (Payal Shakya) நேபாளத்தில் பிறந்த ஆத்திரேலிய வடிவழகு மாதிரியாவார். . காத்மாண்டுவில் உள்ள வீரேந்திரா பன்னாட்டுய் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2004 ஆம் ஆண்டு நேபாள அழகிப்போட்டியில் வெற்றி பெற்றார்.[1][2] தற்போது ஆத்திரேலியாவின் சிட்னி நகரத்தில் வசித்து வருகிறார். ஆத்திரேலியாவின் இரண்டாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமான ஆப்டசு நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேபாள அழகியாக இருந்தபோது, பயல் ஈரநிலங்களையும் காண்டாமிருகங்களையும் காப்பாற்ற வேலை செய்தார். புற்றுநோய் நிவாரண சங்கத்தின் தூதராகவும் இருந்தார்.[3]
21 நவம்பர் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று, சிட்னியில் உக்லிசு இசைக்குழுவின் முன்னணி பாடகரான சருண் தம்ரகரை பயல் மணந்து கொண்டார்.[4][5]