பர்வானி சமஸ்தானம் बड़वानी रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் பர்வானி சமஸ்தானம் | ||||||
தலைநகரம் | பர்வானி | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 836 | ||||
• | 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1941 | 3,051.02 km2 (1,178 sq mi) | ||||
Population | ||||||
• | 1941 | 76,666 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | பர்வானி மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா | |||||
Barwani Princely State |
பர்வானி சமஸ்தானம் (Barwani State) [1] 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கில், சாத்பூரா மலைத்தொடரில், நர்மதை ஆற்றின் தெற்கில் அமைந்த பர்வானி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது.
1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பர்வானி இராச்சியம் 3051.02 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 76,666 மக்கள் தொகையும், ஆண்டு வருமானம் ரூபாய்4,00,000 கொண்டிருந்தது. இதன் குடிமக்களில் பெரும்பான்மையாக பில் மலைவாழ் பழங்குடியினர் ஆவார்.[2] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
இராஜபுத்திர குல சிசோடியா வம்சத்தினரால் 836-ஆம் ஆண்டில் பர்வானி இராச்சியம் நிறுவப்பட்டது. தில்லி சுல்தான்களால் சிறை பிடிக்கப்பட்ட பர்வானி அரச குடும்பத்தினர் கட்டாய இசுலாமிய மதம் மாற்றம் செய்யப்பட்ட போதும், மறைமுக இந்துக்களாக வாழ்ந்தனர். பின்னர் பர்வானி அரச குடும்பத்தினர் மீண்டும் இந்துக்களாக மதம் மாறினர். 17-ஆம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசிற்கு எதிரான போரில் பர்வானி இராச்சியத்தினர் பல பகுதிகளை இழந்தனர்.[3] மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பர்வானி இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கீழ் போபாவார் முகமையின் கீழ் இருந்தது.[4]பர்வானி சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.[5]