பல்ராம்பூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 23°36′18″N 83°37′01″E / 23.605°N 83.617°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீஸ்கர் |
மாவட்டம் | பலராம்பூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,456 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி, சர்குஜா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 497119 |
தொலைபேசி குறியீடு எண் | 07831 |
வாகனப் பதிவு | CG-30 |
இணையதளம் | balrampur |
பலராம்பூர் (Balrampur), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கில் அமைந்த பலராம்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான இராய்ப்பூருக்கு வடக்கே 441 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் 343 அம்பிகாபூர், இராமானுஜகஞ்ச் வழியாக ஜார்கண்ட் மாநிலத்தின் கர்வா நகரத்துடன் இணைக்கிறது.
பலராம்பூர் நகரத்தின் அருகமைந்த தொடருந்து நிலையம் அம்பிகாபூர் மற்றும் கர்வா ஆகும்.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 15 வார்டுகளும், 972 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 4,456 ஆகும். அதில் ஆண்கள் 2,330 மற்றும் பெண்கள் 2,126 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 115 மற்றும் 1,665 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71.77%, இசுலாமியர் 15.55%, கிறித்தவர்கள் 10.73%, மற்றும் பிறர் 1.95% % ஆகவுள்ளனர்.[1]இந்நகர்த்தில் இந்தி மொழி, சர்குஜா மொழி பேசப்படுகிறது.