பலானி அருவி | |
---|---|
![]() | |
அமைவிடம் | குல்லு மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 31°59′54″N 77°08′26″E / 31.99847°N 77.14043°E |
வகை | எழுச்சி |
மொத்த உயரம் | 150 மீ (492 அடி)[1] |
பலானி அருவி (Palani Falls) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவி ஆகும்.[2]
சுமார் 150 மீ (492 அடி)[3] உயரத்திலிருந்து விழும் இந்த அருவி குலு மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்து கோவிலான பிஜ்லி மகாதேவ் கோயிலுக்கு வடக்கே சுமார் 6 கிமீ (3.7 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[4][2] இந்த நீர்வீழ்ச்சி பைன் காடுகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.[5]
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், அருவியில் ஒரு கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் இதன் நீரில் குளிக்க கூடுகிறார்கள். இந்த அருவி புனிதமானதாக நம்பப்படுகிறது.[6][2]
பலானி அருவியினைச் சாலை வழியாக அணுகலாம். அருகிலுள்ள வானூர்தி நிலையம் குலு-மணாலி விமான நிலையம் ஆகும்.[2]