பாகான் லுவார் | |
---|---|
புறநகர் | |
Bagan Luar | |
ஆள்கூறுகள்: 5°24′N 100°22′E / 5.400°N 100.367°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட செபராங் பிறை |
அரசு | |
• பாகான் நாடாளுமன்றத் தொகுதி | லிம் குவான் எங் (ஜ.செ.க) |
• பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதி | சதீசு முனியாண்டி (ஜ.செ.க) |
• செபராங் பிறை நகராண்மை தலைவர் | டத்தோ ரோசாலி மொகமுட் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 12000 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | P |
பாகான் லுவார் (ஆங்கிலம்: Bagan Luar; மலாய் மொழி: Bagan Luar; சீனம்: 蒲甘卢尔) என்பது மலேசியா, பினாங்கு, பட்டர்வொர்த் நகருக்குள் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி. இதன் வடக்கே பாகான் ஜெர்மால் (Bagan Jermal) மற்றும் தெற்கே பாகான் டாலாம் (Bagan Dalam) எனும் புறநகர்ப் பகுதிகள் உள்ளன.[1]
முன்பு இதே பகுதியில் அமைந்து இருந்த கம்போங் பாகான் லுவார் (Kampung Bagan Luar) எனும் கிராமத்தின் பெயரால், இப்போது இந்த புறநகர்ப்பகுதி அழைக்கப்படுகிறது.
ஜாலான் பாகான் லுவார் (Jalan Bagan Luar) எனும் பாகான் லுவார் சாலை (Bagan Luar Road), இந்தப் பகுதியின் மையத்தில் செல்லும் ஒரு பெரிய சாலையாகும்.
இப்பகுதியின் மேற்கில் பட்டர்வொர்த் வெளிவட்டச் சாலை (Butterworth Outer Ring Road - BORR); வடக்கில் தெலாகா ஆயர் சாலை (Jalan Telaga Air); தெற்கில் செயின் பெரி சாலை (Jalan Chain Ferry); கிழக்கில் சிராம் சாலை (Jalan Siram) மற்றும் சுங்கை நியோர் சாலை (Jalan Sungai Nyior) ஆகியவை எல்லைகளாக உள்ளன. கம்போங் பெங்காலி (Kampung Benggali) மற்றும் கம்போங் ஜாவா (Kampung Jawa) எனும் கிராமங்கள் இந்தப் பகுதிக்குள் அமைந்துள்ளன.
இந்தப் பகுதிக்குள் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க அடையாளங்கள்: