பாங்கிட் ஆறு Bangkit River Sungai Bangkit | |
---|---|
ராஜாங் ஆற்றுடன் பாங்கிட் ஆறு | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | ராஜாங் ஆறு |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | தென்சீனக் கடல் |
⁃ ஆள்கூறுகள் | 1°38′17″N 110°29′59″E / 1.6380°N 110.4996°E |
பாங்கிட் ஆறு (மலாய்: Sungai Bangkit; ஆங்கிலம்: Bangkit River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். கத்திபாஸ் ஆற்றுடன், சிபு மாவட்டப் பகுதியில் பாங்கிட் ஆறு கலக்கிறது.[1] கத்திபாஸ் ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகவும் உள்ளது.
இந்த ஆற்றில் ஒரு புதிய ஆற்றுப் படுகை கண்டறியப்பட்டுள்ளது.[2]
கத்திபாசு ஆறு, சரவாக், சோங் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறு ஆகும். ராஜாங் ஆற்றின் மிக முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
தென்மேற்கு சரவாக்கில் வசிப்பவர்களுக்கு நீர் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய ஆதாரமாக கத்திபாசு ஆறு உள்ளது. இந்த ஆற்றுடன் தான் பாங்கிட் ஆறும் இணைகிறது. கத்திபாசு ஆறு, மேல் கப்புவாஸ் மலைத்தொடரில் (Upper Kapuas Range) உற்பத்தியாகி ராஜாங் ஆற்றில் கலக்கிறது.