பாசி | |
---|---|
1868இல் பாசிக் குழுக்கள் | |
மொழிகள் | இந்தி |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | பீகார், உத்தரப் பிரதேசம் |
தொடர்புடைய குழுக்கள் | துராக் பாசி |
பாசி (Pasi) (பாஸி என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் தலித் (பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|தாழ்த்தப்பட்டோர்) சமூகமாகும். இவர்களின் பாரம்பரியத் தொழிலான கள்ளு இறக்குவதிலிலிருந்து இவர்களை பாசி எனக் குறிப்பிடப்படுகின்றனர். பாசி குஜ்ஜார், கைத்வாக்கள், போரியா எனவும் பிரிக்கப்பட்டhallo
. இவர்கள் தெலங்காணாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். [1] [2] இவர்கள் வட இந்திய மாநிலங்களான பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் முக்கியமாக வாழ்கின்றனர்.
ஆங்கிலோ-இந்திய நாட்டுப்புறக் கதைகளின் ஆய்வு மற்றும் ஆவணங்களில் முக்கிய நபராக இருந்த வில்லியம் க்ரூக்கின் கூற்றுப்படி, பாசி என்ற சொல் "பாஷிகா" என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து உருவானது. தங்களது கைகளைக்கொண்டு சப்தம் எழுப்பிக்கொண்டே பனைமரத்திலிருந்து கள்ளு இறக்குவது பாசி சமூகத்தின் அசல் தொழில். இருப்பினும், இந்தியாவின் பிற சாதிக் குழுக்களைப் போலவே, இவைகளும் ஒரு புராணக் கதையைக் கொண்டுள்ளன. விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இவர்கள் கூறுகின்றனர். பாசினா என்ற இந்தி வார்த்தைக்கு வியர்வை என்ற பொருளில் இதற்கு ஆதரவு இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். மேலும் இது இவர்களை சத்திரியர் என்ற கூற்றுக்கு மேலும் வழி வகுக்கிறது. [3]
இவர்கள் முக்கியமாக வட இந்திய மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் வாழ்கின்றனர். இவர்களின் பாரம்பரிய தொழில் பன்றிகளை வளர்ப்பதாகும். இவர்கள், வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலான பாசிகள் இந்திய அரசால் தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், இவர்கள் உத்தரபிரதேசத்தில் இரண்டாவது பெரிய தலித் குழுவாக பதிவு செய்யப்பட்டனர். அந்த நேரத்தில், இவர்கள் மாநிலத்தின் தலித் மக்களில் 16 சதவீதத்தினராக இருந்தனர். பெரும்பாலும் அவத் பிராந்தியத்தில் வசித்து வந்தனர். [4] 2011ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இவர்களின் மக்கள் தொகை 6,522,166 ஆக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் தர்மாலியும் அடங்கும். [5]