பாடாங் செராய் (P017) மலேசிய மக்களவைத் தொகுதி கெடா | |
---|---|
Padang Serai (P017) Federal Constituency in Kedah | |
கெடா மாநிலத்தில் பாடாங் செராய் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கூலிம் மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | பாடாங் செராய் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பாடாங் செராய்; கூலிம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
நீக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அசுமான் நசுருதீன் (Azman Nasrudin) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 133,867 |
தொகுதி பரப்பளவு | 343 ச.கி.மீ |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
பாடாங் செராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Padang Serai; ஆங்கிலம்: Padang Serai Federal Constituency; சீனம்: 巴东士乃联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் (Kulim District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P017) ஆகும்.
பாடாங் செராய் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]
பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியை 2008-ஆம் ஆண்டில் இருந்து, 13 ஆண்டுகளாகத் தமிழர்கள் தக்க வைத்துக் கொண்டனர். இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்களும், சீனர்களும் அதிகமான வாக்காளர்களாக இருந்தாலும் மூன்று முறை தமிழர்களைத் தேர்ந்து எடுத்து மலேசிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்கள். (விவரங்கள் கீழே உள்ளன)
இருப்பினும் கடந்த 15-ஆவது மலேசியப் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது வேட்பாளர் கருப்பையா முத்துசாமி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.[2] அவருக்குப் பதிலாக முகமது சோபி ரசாக் (Mohamad Sofee Razak) என்பவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டார்.
பாடாங் செராய் நகரம் (Padang Serai) மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பாடாங் செராய் நகரம் கோலா கெட்டில்; லூனாஸ் நகரங்களுக்கு இடையில் அமைந்து உள்ளது.
இந்த நகரைச் சுற்றிலும் பல செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்த வகையில் அதிகமான தமிழர்களும் பாடாங் செராய் சுற்றுப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 2018-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவின்படி மலாய்க்காரர்கள் 59.05 விழுக்காடு; இந்தியர்கள் 20.74 விழுக்காடு; சீனர்கள் 19.8 விழுக்காடு.[3] சீனர்களைக் காட்டிலும் தமிழர்கள் சற்று அதிகமாக இருந்தனர்.
1890-ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாடாங் செராய்; கூலிம்; லூனாஸ் பகுதிகளில் இருந்த காபி, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று அழைத்தார்கள்.
அந்தக் காலக்கட்டத்தில் பாடாங் செராய் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் பாடாங் செராய்; கூலிம் வட்டாரங்களில் தொழில்துறை மேம்பாடுகள் காணப்பட்டன.
அவற்றின் காரணமாக பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களில் பெரும்பாலோர் பாடாங் செராய் புறநகர்ப் பகுதிகளில் குடியேறினார்கள். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் பாடாங் செராய் நகரமும் ஒன்றாகும்.
பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பாடாங் செராய் தொகுதி கூலிம் உத்தாரா தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு, பாடாங் செராய் தொகுதி என மறுபெயரிடப்பட்டது | |||
4-ஆவது | 1974–1978 | லிம் கியாம் ஊன் (Lim Kiam Hoon) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
5-ஆவது | 1978–1982 | ||
6-ஆவது | 1982–1986 | டான் கோக் ஊய் (Tan Kok Hooi) | |
7-ஆவது | 1986–1990 | செவ் காம் கொய் (Chew Kam Hoy) | |
8-ஆவது | 1990–1995 | லிம் லே ஊன் (Lim Lay Hoon) | |
9-ஆவது | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2004 | லிம் பீ காவ் (Lim Bee Kau) | |
11-ஆவது | 2004–2008 | ||
12-ஆவது | 2008–2011 | கோபாலகிருஷ்ணன் நாகப்பன் (Gobalakrishnan Nagapan) |
மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்) |
2011–2013 | சுயேட்சை | ||
13-ஆவது | 2013–2018 | நா. சுரேந்திரன் (N. Surendran) |
மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்) |
14-ஆவது | 2018–2022 | கருப்பையா முத்துசாமி (Karupaiya Mutusami) |
பாக்காத்தான் ஹரப்பான் (பிகேஆர்) |
15-ஆவது | 2022–தற்போது | அசுமான் நசுருதீன் (Azman Nasrudin) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் | 133,867 | - |
வாக்களித்தவர்கள் | 92,302 | 68.95% |
செல்லுபடி வாக்குகள் | 91,416 | 100.00% |
செல்லாத வாக்குகள் | 896 | - |
பெரும்பான்மை | 16,260 | 17.79% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | (%) | |
---|---|---|---|---|
அசுமான் நசுருதீன் (Azman Nasrudin) |
பெரிக்காத்தான் | 51,637 | 56.49% | |
முகமது சோபி ரசாக் (Mohamad Sofee Razak) |
பாக்காத்தான் | 35,377 | 38.70% | |
சி. சிவராஜ் (Sivarraajh Chandran) |
பாரிசான் | 2,983 | 3.26% | |
ஸ்ரீ நந்தா ராவ் (Sreanandha Rao) |
சுயேச்சை | 846 | 0.93% | |
அம்சா அப்துல் ரகுமான் (Hamzah Abdul Rahman) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 424 | 0.46% | |
முகமது பக்ரி அசிம் (Mohd Bakri Hashim) |
சபா பாரம்பரிய கட்சி | 149 | 0.16% |
மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் 2008-ஆம் ஆண்டில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரையில் பாடாங் செராய் தொகுதியைப் பிரதிநிதித்த தமிழர்கள்:
பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
12-ஆவது மக்களவை | 2008 – 2011 | கோபாலகிருஷ்ணன் நாகப்பன் | பி.கே.ஆர். |
2011–2013 | சுயேச்சை | ||
13-ஆவது மக்களவை | 2013 – 2018 | நா. சுரேந்திரன் | பி.கே.ஆர். |
14-ஆவது மக்களவை | 2018 – 16.11.2022 | கருப்பையா முத்துசாமி | பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்.) |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)