பாடிகார்ட் | |
---|---|
இயக்கம் | கோபிசந்த் மாலினேனி |
தயாரிப்பு | பெல்லம்கொண்டாசுரேஷ் |
கதை | கோனா வெங்கட் (வசனங்கள்) |
திரைக்கதை | கோபிசந்த் மாலினேனி |
இசை | தமன் |
நடிப்பு | வெங்கடேஷ் திரிசா |
ஒளிப்பதிவு | சயாம் கே. நாயடு |
படத்தொகுப்பு | கவுதம் ராஜூ |
கலையகம் | சாய் கணேஷ் புரொடசன் |
விநியோகம் | வாக்கர் ஐபிசி |
வெளியீடு | 14 சனவரி 2012 |
ஓட்டம் | 155 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
மொத்த வருவாய் | மதிப்பீடு ₹55 கோடி[1] |
பாடிகார்டுஎன்பது 2012 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படம். இதை இயக்கியவர் கோபிசந்து மலினெலி. தயாரித்தவர் பெல்லங்கொண்டா சுரேஷ். வெங்கடேஷ், திரிசா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர் இது மலையாளத் திரைப்படமான பாடிகார்டு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது. இதற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். இது ஜனவரி 14, 2012 அன்று வெளியானது.
மலையாளத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை தெலுங்கில் மொழிமற்றம் செய்து எடுக்க தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் முடிவுசெய்தார்.அதன்படி தெலுங்கு பதிப்பில் நடிக்க வெங்கடேஷ் மற்றும் மலையாள பதிப்பை இயக்கிய இயக்குநர் சித்திக்கை அணுகினர்.ஆனால் இயக்குநர் சித்திக் இந்தி மற்றும் தமிழில் (காவலன்) இந்த திரைப்படத்தின் மொழி மற்றம் செய்து கொண்டுயிருந்தார்.பின்னர் கோபிசந்த் மாலினேனி இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
பாடிகார்ட் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்துசுதான் டைம்சு இதை 5க்கு 3 என மதிப்பிட்டது, இது "சரியான குடும்ப பொழுதுபோக்கு" என்று அழைத்தது.