முந்தைய பெயர்கள் | பாதுகாப்பு மேலாண்மை நிறுவனம் |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | சிறப்பாக செய்ல்படுவதன் மூலம் வெற்றி |
வகை | இராணுவக் கல்வி நிலையங்கள் |
உருவாக்கம் | டிசம்பர் 1970 |
கட்டளை அதிகாரி | முனைவர் மேஜர் ஜெனரல் சந்தீப் சர்மா |
அமைவிடம் | , , 17°50′15″N 78°56′30″E / 17.83750°N 78.94167°E |
சுருக்கப் பெயர் | CDM |
சேர்ப்பு | உசுமானியா பல்கலைக்கழகம் |
இணையதளம் | cdm |
பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி (College of Defence Management) (CDM) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் செகந்திராபாத் நகரத்தில் செயல்படுகிறது.[1] இந்திய இராணுவத்தின் முப்ப்டை அதிகாரிகளுக்கும் இக்கல்லூரியில் பாதுகாப்புத் துறையில் மேலாண்மைப் பயிற்சி அளிக்கிறது.[2] இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் ஆதரவுடன் இயங்கும் இந்த மேலாண்மைக் கல்லூரி, இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு அறிவியல் பூர்வமாக பாதுகாப்பு மேலாண்மை அறிவியலில் பயிற்சி வழங்குகிறது. [3]
உசுமானியா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான இந்த பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி பாதுகாப்பு மேலாண்மைப் படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் படிப்புகளையும் வழங்குகிறது. இராணுவத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி, ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனங்கள் கூடிய விரைவில் ஒரு குடையின் கீழ் இந்திய தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக விளங்க உள்ளது.[4]
இந்த மையத்தில் பாதுகாப்பு மேலாண்மையில் ஆய்வுப் படிப்பில் முனைவர் பட்டங்கள் வழங்கப்படுகிறது.[5]