பாத்வெல் Badvel | |
---|---|
ஆள்கூறுகள்: 14°45′N 79°03′E / 14.75°N 79.05°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | ஓய்.எசு.ஆர் கடப்பா |
பரப்பளவு | |
• மொத்தம் | 60.93 km2 (23.53 sq mi) |
ஏற்றம் | 126 m (413 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 70,626 |
• அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 516227 |
வாகனப் பதிவு | ஆ.பி-04 |
பாத்வெல் (Badvel) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். பாத்வெல் நகரம் இரண்டு மண்டலங்களில் அமைந்துள்ளது. இது பாத்வெல் வருவாய் கோட்டத்தின் தலைமையகம் ஆகும்.[2] நகரின் பெரும் பகுதி பாத்வெல் மண்டலத்தின் கீழும், மீதமுள்ள பகுதி கோபவரம் மண்டலத்தின் கீழும் வருகிறது. இது பாத்வெல் வருவாய் கோட்டத்தின் கீழ் வருகிறது.[3]
புரோட்டத்தூர் நகரத்திலிருந்து பாத்வெல் வெறும் 57 கிலோமீட்டர்கள் (35 mi) தொலைவிலும் கடப்பா நகரிலிருந்து 59 கிலோமீட்டர்கள் (37 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்விரண்டு நகரங்களும் கடப்பா மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும்/. கடப்பா மாவட்டத்தின் 3 ஆவது பெரிய நகரமாக பாத்வெல் நகரமும், அதைத் தொடர்ந்து கடப்பா மற்றும் புரோட்டத்தூர் ஆகியவை இதை தொடர்ந்தும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண் -67 பாத்வெல் நகரம் வழியாக செல்கிறது.. புவியியல் ரீதியாக இந்த நகரம் கிழக்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
பாத்வெல் நகரம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.. தற்போது இது பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தாசரி சுதா.என்பவராவார்.[4]
இந்நகரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வி கற்பிக்கப்படுகிறது, மேலும் இங்கு மாநிலத்தின் விவசாயக் கல்லூரி ஒன்றும் உள்ளது. [5][6] பல்வேறு பள்ளிகளும் ஆங்கிலம், தெலுங்கு. மொழிகளை பயிற்று மொழிகளாகக் கொண்டுள்ளன.