பானகம் (Panakam)[1] மற்றும் பனகா[2] என்றும் அழைக்கப்படுவது (lit. 'இனிப்பு பானம்')[3]தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு பாரம்பரிய இனிப்பு பானம் ஆகும்[4]மதுர் ஜாஃப்ரீ கூற்றுப்படி, இது கிமு 1000-இல் அறியப்பட்டது. 2014ஆம் ஆண்டில் கருத்து தெரிவித்த இவர், இது முற்காலத்தில் பரிமாறப்பட்டதைக் காணவில்லை என்றாலும் பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றார்.[5]
இந்த பானம் பாரம்பரியமாக இராம நவமி அன்று தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.[6] இது பொதுவாக இந்து பண்டிகைகளின் போது பானமாகவும், சமய விழாக்களுக்குப் பிறகு பிரசாதமாகவும், குறிப்பாகக் கோடை மாதங்களில் வழங்கப்படுகிறது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா "ஸ்ரீராமநவமி" என்றால் பானகம் இணையாக அமைவதாகத் தெரிவித்தது.[7] இந்தியாவின் சில பகுதிகளில், திருமண விருந்திலும் வழங்கப்படும் பாரம்பரிய பானமாக உள்ளது.[8][9][10]
ஜாஃப்ரியின் கூற்றுப்படி, இந்த பானத்தின் அடிப்படை சேர்க்கைப் பொருளாக வெல்லம் உள்ளது.[5] பொதுவாகக் எலுமிச்சை சாறு, ஏலக்காய், இஞ்சி ஆகிய பொருட்களுடன் கலந்து பானகம் தயாரிக்கப்படுகிறது. இப்பொருட்கள் அனைத்தும் பொதுவாக குளிர்ந்த நீரில் கலந்து தயாரிக்கப்படுகின்றது.[11][12] ஜாஃப்ரி தனது 2014 உலக சைவ உணவில், இதைச் சூடாகப் பரிமாறுமாறு அழைப்பு விடுத்தார்.[5] குளிர்ச்சியாக வழங்கப்படும் ஜாஃப்ரி தயாரிப்பில் எலுமிச்சை சாறு உள்ளது. ஆனால் சூடாகப் பரிமாறும் போது எலுமிச்சையினை இவர் தவிர்த்திருந்தார்.[5]
பானக்கம் என்பது புளி, வெல்லம்/கருப்பட்டி, திப்பிலி, ஏலம் ஆகியவை கலந்து தயாரிக்கப்படும் சுவைநீர். முன்னர், கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் இது விரும்பிக் குடிக்கப்பட்டது. இன்றும் சில ஊர்களில் கோயில் திருவிழாக்களின் போது மோர்ப்பந்தல், தண்ணீர்ப்பந்தல் போன்று பானக்கமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.