Bharath University | |
முந்தைய பெயர்கள் | Bharath Engineering College |
---|---|
குறிக்கோளுரை | புத்தமைவினால் உலகை வெல்க. கடின உழைப்பால் விண்மீன் தொடு. |
வகை | நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1984 |
தலைவர் | ஜே. சந்தீப் ஆனந்த் |
வேந்தர் | அவ்வை நடராசன் |
துணை வேந்தர் | எம். பொன்னவைக்கோ |
கல்வி பணியாளர் | 1300 |
மாணவர்கள் | 10000 |
அமைவிடம் | , , 12°54′28″N 80°08′32″E / 12.907748°N 80.142163°E |
வளாகம் | நகர்ப்புறம் நான்கு வளாகங்களில் ஏறத்தாழ 305 ஏக்கர்கள் (123 ha). |
தரநிர்ணயம் | என்ஏஏசி('ஏ' தரநிலை)[1] |
சேர்ப்பு | ப.மா.கு இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் |
இணையதளம் | www.bharathuniv.ac.in |
பாரத் பல்கலைக்கழகம் (Bharath University) அல்லது பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் (BIHER) அல்லது பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம் (BIST) தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், உயர்கல்விக்கான இந்திய நிறுவனமும் ஆகும். பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை 'ஏ' தரநிலை வழங்கியுள்ளது.[2]
பாரத் பல்கலைக்கழகம் 1984ஆம் ஆண்டு எஸ்.ஜகத்ரட்சகனால் பாரத் பொறியியல் கல்லூரி என நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் துவக்கத்தில் நிறுவப்பட்ட தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இது ஒன்றாக இருந்தது.[3] இந்தப் பொறியியல் கல்லூரி முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்துடனும் பின்னர் அண்ணாப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டிருந்தது. 2002ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு இக்கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலையை வழங்கியது. அப்போது இதன் பெயர் பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் என மாற்றப்பட்டது. செப்டம்பர் 2006இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பெயர்களில் பல்கலைக்கழகம் என்ற ஒட்டை வைத்துக்கொள்ளலாம் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பினை அடுத்து இதன் பெயர் பாரத் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
பாரத் பல்கலைக்கழகம் நான்கு வளாகங்களிலிருந்து செயல்படுகின்றது. இவற்றில் மூன்று சென்னையிலும் ஒன்று புதுச்சேரியிலும் உள்ளன.[4]
இதுவே 1984இல் நிறுவப்பட்ட முதன்மை வளாகமாகும். இது துவக்கத்தில் 'பாரத் பொறியியல் கல்லூரி' என்று பெயரிடப்பட்டிருந்தது. 2002ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலை எய்தியபோது, இதன் பெயர் 'பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம்' என மாற்றப்பட்டது. 2003இல் 'பாரத் பல்கலைக்கழகம்' உருவானபோது, இக்கல்லூரிக்கு 'பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம்' எனப் பெயரிடப்பட்டது.
இக்கல்லூரி 2004ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதே வளாகத்தில் ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரியும் உள்ளது.
இக்கல்லூரி 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இக்கல்லூரி 2002ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதே வளாகத்தில் 2007ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); External link in |title=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); External link in |title=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); External link in |title=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)