பாலசுப்பிரமணியம் | |
---|---|
![]() | |
பிறப்பு | கே. டி. பாலசுப்பிரமணியம் 18 ஆகத்து 1966 காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | இ. மாலா |
பிள்ளைகள் | 2 (கவின், கருண்) |
கே. டி. பாலசுப்ரமணியம் (Balasubramaniem, பிறப்பு 18 ஆகத்து 1966) என்பவர் ஓர் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.[1][2] இவர் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக சுமார் 5 ஆண்டுகள் தேவர் மகன், திருடா திருடா, குருதிப்புனல் போன்ற விருது பெற்ற படங்களில் பணியாற்றினார்.[3]
பாலசுப்ரமணியம் தமிழ்நாட்டின் காரைக்குடியில் பிறந்தார். அங்கு இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் திருப்பத்தூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு, திருப்பத்தூர் ஏ.பி.எஸ்.ஏ கல்லூரிக்கு சென்றார். இவர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இ. மாலாவை மணந்தார். இந்த இணையருக்கு கவின், கருண் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவரது முதல் படம் இரணியன் ஆகும். அது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திய வரலாற்று நாடகத் திரைப்படமாகும். பின்னர் இயக்குநர் பாலாவின் பிதாமகன் மற்றும் 180 ஆகிய படங்களில் பணியாற்றினார்.
தேவர் மகன் (1992), திருடா திருடா (1993), குருதிப்புனல் (1995) போன்ற விருது பெற்ற படங்களில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் சுமார் 5 ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்து அதன் வழியாக பாலசுப்ரமணியம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1997 | லேடிஸ் ஒன்லி | இந்தி | வெளியிடப்படவில்லை |
1999 | இரணியன் | தமிழ் | |
2000 | யுவகுடு | தெலுங்கு | |
2002 | உன்னை நினைத்து | தமிழ் | |
2003 | வசீகரா | தமிழ் | |
பிதாமகன் | தமிழ் | ||
இனிது இனிது காதல் இனிது | தமிழ் | ||
2004 | எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி | தமிழ் | |
2005 | மஜா | தமிழ் | |
2006 | தம்பி | தமிழ் | |
சைனிகுடு | தெலுங்கு | ||
2007 | அழகிய தமிழ்மகன் | தமிழ் | |
2008 | கண்ணும் கண்ணும் | தமிழ் | |
ஜெயம் கொண்டான் | தமிழ் | ||
2009 | நினைத்தாலே இனிக்கும் | தமிழ் | |
2010 | குட்டி | தமிழ் | |
உத்தம புத்திரன் | தமிழ் | ||
2011 | 180 ( நூற்றென்பது ) | தமிழ்/தெலுங்கு | தமிழ்நாடு அரசு திரைப்பட விருது |
சிங்கம் புலி | தமிழ் | ||
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | தமிழ் | |
நீர்ப்பறவை | தமிழ் | சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சைமா விருதுக்கு- பரிந்துரைக்கப்பட்டது. | |
2013 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | தமிழ் | |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் | தமிழ் | ||
2014 | இது கதிர்வேலன் காதல் | தமிழ் | |
நண்பேண்டா | தமிழ் | ||
2015 | பசங்க 2 | தமிழ் | |
2016 | ரஜினி முருகன் | தமிழ் | |
கதகளி (திரைப்படம்) | தமிழ் | ||
இது நம்ம ஆளு | தமிழ் | ||
2017 | பொதுவாக எம்மனசு தங்கம் | தமிழ் | |
2018 | சீமராஜா | தமிழ் | |
2019 | போத ஏறி புத்தி மாறி | தமிழ் | |
2020 | அன்புள்ள கில்லி | தமிழ் | |
2021 | சக்ரா | தமிழ் | |