இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பாலி ராம் பகத் | |
---|---|
இராஜஸ்தானின் ஆளுநர் | |
பதவியில் 30 சூன் 1993 – 1 மே 1998 | |
முன்னையவர் | தானிக் லால் மண்டல் (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | தர்பாரா சிங் |
இமாச்சலப் பிரதேசத்தின் 8வது ஆளுநர் | |
பதவியில் 11 பிப்ரவரி 1993 – 29சூன் 1993 | |
முன்னையவர் | சுரேந்திரநாத் (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | குல்சர் அகமது |
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 25 செப்டம்பர் 1985 – 12 மே 1986 | |
முன்னையவர் | ராஜீவ் காந்தி |
பின்னவர் | பி. சிவ சங்கர் |
ஆறாவது இந்திய மக்களவைத் தலைவர் | |
பதவியில் 1976–1977 | |
Deputy | ஜி. ஜு. இசுவெல் |
முன்னையவர் | ஜி. எஸ். தில்லான் |
பின்னவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பட்னா, பீகார், பிரித்தானிய இந்தியா | 7 அக்டோபர் 1922
இறப்பு | 2 சனவரி 2011 புது தில்லி, இந்தியா | (அகவை 88)
பாலி ராம் பகத் (Bali Ram Bhagat) (7 அக்டோபர் 1922 - 2 சனவரி 2011) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமாவார்.
பகத், பீகாரின் பாட்னாவில் ஒரு பணக்கார யாதவக் குடும்பத்தில் அக்டோபர் 1922 இல் பிறந்தார். 1939 இல் இந்திய சுதந்திர இயக்கத்தின் போது இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். பாட்னா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் பாட்னா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]
சுதந்திரத்திற்குப் பிறகு, முதல் ஐந்து பதவிகள் (1952-1977 & 1984-1989) உட்பட ஆறு பதவிகளுக்கு ஆரா மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[2] இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் அதிகாரத்தை இழந்த, 1977 பொதுத் தேர்தலில் பகத் சந்திரதேவ் பிரசாத் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.[3]
1963 மற்றும் 1967-க்கு இடையில், பகத் திட்டமிடல் மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றினார். அதே ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சராவதற்கு முன்னர் 1967ஆம் ஆண்டில் சிலகாலம் பாதுகாப்பு அமைச்சகத்தில் அமைச்சராக இருந்தார். பகத் 1969 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வர்த்தக மற்றும் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டபோது அமைச்சரவையில் உறுப்பினரானார். பின்னர், இவர் எட்டு மாத காலத்திற்கு எஃகு மற்றும் கனரக பொறியியல் அமைச்சராக இருந்தார்.[2]
இந்திரா காந்தியின் முதல் ஆட்சியில் கொந்தளிப்பான இறுதி காலத்தில் இவர் 1976 முதல் 1977 வரை மக்களவையில் சபாநாயகராக பணியாற்றினார்.[2] 1985 முதல் 1986 வரை இந்திராவின் மகன் ராஜீவ் காந்தியின் கீழ் இந்திய வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார். 1993 ஆம் ஆண்டில் சிலகாலம் இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராகவும், 1993 முதல் 1998 வரை ராஜஸ்தானின் ஆளுநராகவும் இருந்தார்.
பாலி ராம் பகத் புது தில்லியில் 2 ஜனவரி 2011 அன்று இறந்தார்.[1]