முஹம்மத் ரஹீம் பாவா முஹையுத்தீன் | |
---|---|
படிமம்:Bawa Muhaiyaddeen.png | |
பிறப்பு | மே 17, 1917 இலங்கை |
இறப்பு | டிசம்பர் 8, 1986 பிலடெல்பியா, ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | குரு பாவா |
காலம் | 20-ஆம் நுாற்றாண்டு |
பகுதி | இலங்கை, ஐக்கிய அமெரிக்கா |
பள்ளி | சூபிசம் |
முஹம்மத் ரஹீம் பாவா முஹையுத்தீன்(பிற்பபு: மே 17, 1917; இறப்பு: டிசம்பர் 8, 1986) அவர்கள் இலங்கையச் சேர்ந்த இஸ்லாமிய தமிழ் அறிஞரும், சூபி மெய்ஞானியும் ஆவார்.இவர்கள் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரிற்கு முதலில் அக்டோபர் 11, 1971 வந்தார்.[1] பிலடெல்பியாவில் பாவா முஹைய்யத்தீன் கற்கையை ஸ்தாபித்தார்.பிலடெல்பியாவில் அவர்களது மாணவர்கள் ஏறத்தாள 1000 பேர் உள்ளனர்.[2] பாவா முஹைய்யத்தீன் கற்கை நிலையங்கள் ஐக்கிய அமெரிக்கா, கனடா மட்டுமின்றி அவுஸ்ரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலும் பரந்து காணப்படுகின்றன.அவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னர் அவர்களது மாணவர்கள் இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இருந்துள்ளனர்.[3]ஐக்கிய அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சில முஸ்லிம் ஆத்மஞானிகளில் ஒருவராக அறியப்படுகின்றார்.