பாவியா
பாவியா செக்சுபங்கேட்டா ஆண் & பெண் சிலந்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
வரிசை:
அரேனியா
குடும்பம்:
லைகோசிடே
பேரினம்:
பாவியா
மாதிரி இனம்
பாவியா ஏரிசெப்சு சைமன், 1877
சிற்றினங்கள்
உரையினை காண்க .
பாவியா (Bavia ) என்பது குதிக்கும் சிலந்திகளின் பேரினமாகும் .
பாவியா சிற்றினங்கள் 6 முதல் 11 மில்லிமீட்டர்கள் (0.24 முதல் 0.43 அங்) நீளமுடையன. இந்த பேரினத்தின் சிற்றினங்கள் நீண்ட கால்களுடன் மெல்லியவை.[ 2]
பாவியா பெரும்பாலும் புதர்களின் இலைகளில் அல்லது கீழ் மரக்கிளைகளில் வாழ்கின்றன.[ 2]
பாவியா ஆத்திரேலிய பகுதி முழுவதும் காணப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட சிற்றினம் ஒன்று, மடகாசுகரில் காணப்படுகிறது.
சனவரி 2021-ல் உலக சிலந்தி பட்டியலில் பட்டியலிடப்பட்ட சிற்றினங்கள்:[ 1]
பெண் பா. செக்சுபங்க்டாட்டா
பாவியா ஏரிசெப்சு சைமன், 1877 – மலேசியா முதல் ஆஸ்திரேலியா , பசிபிக் தீவுகள்
பாவியா அல்போலினேட்டா பெக்காம் & பெக்காம், 1885 – மடகாஸ்கர்
பாவியா கேபிசுட்ராட்டா (சி. எல். கோச், 1846) - மலேசியா
பாவியா டெகோராட்டா (தோரெல், 1890) - சுமத்ரா
பாவியா பெடோர் பெர்ரி, பீட்டி & ப்ரோஸ்ஸின்ஸ்கி, 1997 – கரோலின் தீவுகள்
பாவியா கேப்ரியலி பேரியன், 2000 - பிலிப்பீன்சு
பாவியா ஹியன்ஸ் (தோரெல், 1890) - சுமாத்திரா
பாவியா இன்டர்மீடியா (கார்ஷ், 1880) - பிலிப்பைன்ஸ்
பாவியா மௌரேரே (ஃப்ராய்டன்சுஸ் & சீட்டர், 2016)) - பிலிப்பைன்ஸ்
பாவியா நெசஜினா மேடிசன், 2020 - மலேசியா (போர்னியோ)
பாவியா பிளானிசெப்சு (கார்ஷ், 1880) - பிலிப்பீன்சு
பாவியா செக்சுபன்கேட்டா (டோலெஷ்கல், 1859) – இந்தோனேசியா (சுமாத்திரா ), மலேசியா, சப்பான் (இரியூக்கியூ தீவுகள் ) முதல் ஆத்திரேலியா வரை
பாவியா சினோஅமெரிக்கா லீ & பெங், 2011 - சீனா
பாவியா வலிடா (கீசர்லிங், 1882) - குயின்ஸ்லாந்து , கில்பர்ட் தீவுகள்
பாவியா லூடிக்ரா (கீசர்லிங், 1882) சண்டலோட்சு பேரினத்திற்கு மாற்றப்பட்டது மற்றும் 2000ஆம் ஆண்டில் சண்டலோட்சு சூப்பர்பசுக்கு ஒத்ததாக இருந்தது.[ 3]
இந்தியாவில் காணப்படும் ஒரு சிற்றினத்திற்கு "பாவியா கைரலி " என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சனவரி 2021[update] -ல் உலக சிலந்தி அட்டவணையால் இந்த பெயர் அங்கீகரிக்கப்படவில்லை.[ 1]
(2000): An Introduction to the Spiders of South East Asia. Malaysian Nature Society , Kuala Lumpur.
(2007): The world spider catalog , version 8.0. American Museum of Natural History .
(1929): Spolia Mentawiensa: Araneae. The Bulletin of the Raffles Museum 2:125-133 PDF பரணிடப்பட்டது 2006-12-29 at the வந்தவழி இயந்திரம் (description of B. smedleyi and how it is distinct from several similar species)